அவங்க நமக்கு உணவு கொடுக்குறாங்க.. மனுசங்க ரொம்ப நல்லவங்க.. துயரத்தில் ஆழ்த்திய யானையின் மரணம்

திருவனந்தபுரம்: அன்னாசி பழத்தில் வெடி மருந்தை வைத்துக் கொடுத்து கர்ப்பிணி யானையை கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Khushbu Slapping Question • மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கா? | Pregnant Elephant

பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர் முதல் சின்மயி வரை பலரும் இந்த கொடூரமான செயலை கண்டித்து பதிவுகளை போட்டு வருகின்றனர்.

ஜார்ஜ் பிளாய்டின் மரணம் எவ்வளவு கொடுமையானதோ அதை விட இந்த யானைக்கு மனிதர்கள் உருவில் இருக்கும் சில அரக்கர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

கர்ப்பிணி யானையை துரத்த அன்னாசி பழத்தில் வெடி.வலியால் துடித்து ஆற்றில் நின்றபடியே உயிரை விட்ட துயரம்

ஷ்ரத்தா கபூர் கண்டனம்

ஷ்ரத்தா கபூர் கண்டனம்

வயிற்றில் குழந்தையுடன் மனிதர்கள் கொடுத்த அன்னாசி பழத்தை நம்பி வாங்கி சாப்பிட்ட யானை நீரில் நின்றபடி இறந்த சம்பவம் நாடு முழுவதும் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதுகுறித்த செய்தியை அறிந்த பாலிவுட் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த கொடிய செயலை செய்தவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மோசமான உயிரினம்

மோசமான உயிரினம்

யானையின் கொடூர கொலை செய்தியை கேட்டு, மனம் மில்லியன் துண்டுகளாக உடைந்து விட்டது என்றும், இந்த உலகிலேயே மோசமான வாழ தகுதியற்ற உயிரினமாக மனித இனம் மாறி விட்டது என்றும் பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடுமையான தண்டனை

கடுமையான தண்டனை

பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா யானையின் மரணம் குறித்து அறிந்து மிகவும் மனம் வாடியுள்ளார். சமீபத்தில் வெளியான நெட்பிளிக்ஸ் படம் எக்ஸ்ட்ராக்‌ஷனில் தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் இணைந்து நடித்த இவர், மனிதத்தன்மையற்ற இந்த செயலை செய்த கயவர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் சும்மா விடக் கூடாது. கடுமையான தண்டனை அவர்களுக்கு தரவேண்டும் என கொதித்துள்ளார்.

குவிகிறது கண்டனம்

குவிகிறது கண்டனம்

#Elephant என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி கேரளாவில் மனிதாபிமானமற்ற முறையில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொடுத்த கயவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், மக்கள் மனம் ஏன் இந்த அளவுக்கு க்ரோதத்துடன் மாறி உள்ளது என்றும் பலரும் யானையின் உயிரை உலுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அட்லி கண்டனம்

அட்லி கண்டனம்

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அட்லி, இந்த செய்தியை கேட்டதும் அதில் இருந்து தன்னால் மீண்டு வர முடியவில்லை, அந்த யானை கர்ப்பிணியாக இருந்துள்ளது என தனது டிவிட்டர் பதிவில் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.

நிதி அகர்வால் கண்டனம்

நிதி அகர்வால் கண்டனம்

மனித இனத்தின் மொழி அன்பு தான் என சொல்வார்கள். ஆனால், இங்கே நடந்திருக்கும் செயல், மனித இனத்தின் மீதே மிகப்பெரிய கேள்வியை எழுப்பி இருக்கிறது. இப்படி செய்து அந்த கயவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நீச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பூமி பட நாயகி நிதி அகர்வால் டிவீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X