IPL 2025: தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

சென்னை: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 18வது சீசன் முதல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. ஈடன் கார்டனரில் மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்துவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் திருவிழா சூடு பிடித்துள்ளது 22ந் தேதி தொடங்கும் இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியனாக கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்று தீர்ந்துவிட்டன. காலை 10.15 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. அதே போல மார்ச் 23ந் தேதி சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன. இந்த ஆன்லைனில் விற்பனை தொடங்கி உள்ளது. இதில் டிக்கெட் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IPL 25 opening ceremony Shreya 25

தொடக்கவிழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்: ஐபிஎல் போட்டியின் தொடக்க நாளில் கலை நிகழ்ச்சிகள் மற்ம் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும், அந்த வகையில், இந்த முறையில் சினிமா பிரபலங்கள், பாப் பாடகர்கள், நடனக்கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், பிரபல பாலிவுட் ஜோடியான ஷர்தா கபூர் மற்றும் வருண் தவான் ஆகியோர் இணைந்து நடனமாட உள்ளனர். அவர்களின் நடனத்தை காண ஏராளமானோர் ஆர்வமுடன் உள்ளனர். இந்த கலை நிகழ்ச்சியில் பிரபல பாப் பின்னணி பாடகி, ஸ்ரேயா கோஷல், பஞ்சாப் பாப் பாடகர் கரண் அஜ்லர், மேலும், பிரபல பின்னணி பாடகர் அரிஜித் சிங் தனது இனிமையான பாடல்களால் பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் தவிர பல்வேறு சினிமா பிரபலங்கள் ஐபிஎல் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளில் ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

IPL 25 opening ceremony Shreya 25

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கொண்டாட்டத்தில் பின்னணிப் பாடகர் சோனு நிகம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் விழாவை சிறப்பித்தனர். இதில், சோனுவும் ரஹ்மானும் பாலிவுட் வெற்றிப் பாடல்களையும் ஒன்றாக பாடினார்கள்.அதே போல தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் சிவாஜி படத்தில் இடம் பெற்ற பல்லே லக்கா பல்லே லக்கா, உயிரே படத்தில் இடம் பெற்ற தைய்ய, தைய்ய தய்யா மற்றும் ஜெய்ஹோ பாடல் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும், அந்தரத்தில் பறந்து வந்தபடி பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் தேசிய கொடியுடன் மைதானத்துக்குள் வந்தார். பின் அந்த கொடியை மற்றொரு பாலிவுட் நடிகரான டைகர் ஷெராப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இருவரும் சில பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடினர். இந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சாம்பியன் பட்டம் வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X