10 வருடத்துக்கு பிறகு என்ன சொல்வீர்கள்..? பிரபல நடிகை கேள்வி..வில்லங்கப் பதில் அளித்த ரசிகர்கள்

By

சென்னை: நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத் ரசிகர்கள் கேட்டிருந்த அந்த கேள்விக்கு பலர் எடக்கு மடக்கான பதில்களை கூறியுள்ளனர்.

கன்னடத்தில் வெளியான யு டர்ன் படம் மூலம் கவனிக்கப்பட்டவர் நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத். தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கிய இவன் தந்திரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதில், கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

அடுத்து, மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். பின்னர் மாதவன், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா, ரிச்சி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் ஸ்ரத்தா ஶ்ரீநாத், இப்போது, விஷால் நடிக்கும் சக்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

லாக்டவுன்

லாக்டவுன்

இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் ரெஸ்டாரென்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் ஸ்ரத்தா ஶ்ரீநாத், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

ரசிகர்களிடம் கேள்வி

ரசிகர்களிடம் கேள்வி

அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடும் அவர், தான் எப்போது பெண்ணியவாதியாக மாறினேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இப்போது புதிய பதிவை இட்டுள்ள நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரசிகர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி இருக்கிறது.

என்ன சொல்வீர்கள்?

என்ன சொல்வீர்கள்?

அதில், 'பத்து வருடத்துக்குப் பிறகு நான் என் குழந்தைகளிடம் சொல்வேன், அந்த வருடம் இதே நாளில், ஒரு காயத்தில் இருந்து தப்பினேன் என்று. ஒரு மில்க்மெய்ட் டின்னை பிரிக்கும்போது தகரம் கிழித்து என் விரலில் காயம் ஏற்பட்டுவிட்டது. இந்த தருணத்தை நான் சொல்வேன். நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் 10 வருடத்துக்குப் பிறகு என்ன சொல்வீர்கள்? என்று நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத் கேட்டிருந்தார்.

முடித்து விட்டேன்

முடித்து விட்டேன்

இதற்கு பல நெட்டிசன்கள், விதவிதமானக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர், ஸ்ரத்தா ஶ்ரீநாந்த் மிகவும் அழகானவர் என்று சொல்வேன் என்று தெரிவித்துள்ளனர். சிலர் எடக்கு மடக்கான பதில்கள் தெரிவித்துள்ளனர். அப்போது ஸ்ரத்தா ஶ்ரீநாத்தின் பதிவை படித்துக்கொண்டிருந்தே என்று சிலரும், கையில் காயம் ஏற்பட்டிருந்தாலும் மில்க்மெய்டை முழுவதுமாகக் குடித்து முடித்துவிட்டேன் என்று சொல்வேன் எனவும் சிலர் கூறியுள்ளார்.

பதிலளித்தது இல்லை

பதிலளித்தது இல்லை

இன்னொரு ரசிகர், என் குழந்தைகளிடம், ஸ்ரத்தா ஶ்ரீநாத் எனது பதிவுகளுக்கு ஒரு போதும் பதிலளித்தது இல்லை எனச் சொல்வேன் என்று தெரிவித்துள்ளார். அப்படியே யாரை கல்யாணம் பண்ண போறீங்கன்னும் சொல்லுங்க என்று ஒருவர் கேட்டுள்ளார். இன்னொருவர், பத்து வருடத்துக்குப் பிறகு, இப்போது உங்களுக்கு நடந்த கதையை சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X