திருமணம் முடிந்தால் நடிகைகள் அவ்ளோதானா? இன்ஸ்டாவில் காரசார விவாதம் நடத்திய அஜித் பட நடிகை!

By

சென்னை: நடிகைகளுக்கு திருமணமாகி விட்டால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது பற்றி பிரபல நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆரோக்கியமான விவாதம் நடத்தி உள்ளார்.

கன்னடத்தில் வெளியான யு டர்ன் படம் மூலம் கவனிக்கப்பட்டவர், ஸ்ரத்தா ஶ்ரீநாத். தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கிய இவன் தந்திரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதில், கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

அடுத்து, மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். மாதவன், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா, ரிச்சி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் ஸ்ரத்தா ஶ்ரீநாத், இப்போது, விஷால் நடிக்கும் சக்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் ரெஸ்டாரென்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

ஆரோக்கியமான விவாதம்

ஆரோக்கியமான விவாதம்

இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தெரிவித்திருந்தார். லாக்டவுன் காரணமாக பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இருக்கும் நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ஆரோக்கியமான விவாதங்களை ரசிகர்களுடன் நடத்தி வருகிறார்.

திருமணத்துக்குப் பின்

திருமணத்துக்குப் பின்

இப்போது, திருமணத்திற்கு பிறகு ஒரு நடிகை சினிமாவை விட்டுவிட வேண்டுமா? உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இது குறித்து விவாதியுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் தன் தோழி விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் திருமணத்துக்கு பின் நான் நடிக்கலாமா? என கேட்டதாகவும் ஒரு நடிகையிடம் இருந்து இப்படி கேள்வி எழுந்தது அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

ஹிதா சந்திரசேகர்

ஹிதா சந்திரசேகர்

இதையடுத்து ஏராளமானோர், நடிகைகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர். புதிய அலை சினிமா இதை மாற்றி இருக்கிறது என்றும் தற்போது நிலைமை மாறி வருவதாகவும் சிலர் கூறியுள்ளனர். கன்னட நடிகை ஹிதா சந்திரசேகர் கூறும்போது, இந்த பிரச்னை பற்றி பலமுறை பேசியிருக்கிறேன். நடிகைகளின் திருமணத்துக்கும் வேலைக்கும் சம்மந்தமில்லை.

Recommended Video

Ajith Heroine சர்ச்சை Tweet | Shraddha Srinath, Nerkonda Parvai, Thala Ajith
நடிகர்கள் ரொமான்ஸ்

நடிகர்கள் ரொமான்ஸ்

எனக்குத் திருமணமாகிவிட்டது என்று தெரிந்ததும் சில இயக்குனர்கள் என்னை நடிக்க அழைக்கவில்லை' என்று கூறியிருந்தார். மேலும் சிலர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் பற்றி பற்றி மற்றவர்களின் கருத்தை கேட்க விரும்பினேன். திருமணமான நடிகர்கள், படத்தில், நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதில்லையா? இதுபோன்ற கேள்விகளை ஏன் அவர்களிடம் கேட்பதில்லை? என்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X