twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கூட்டமான பஸ்.. போருக்கு போவதற்கு சமம்.. இந்த நடிகைக்கும் அந்த கொடுமை நடந்திருக்காம்!

    |

    சென்னை: அரசு பேருந்துகளில் கூட்டத்துடன் கூட்டமாக பயணிக்கும் பெண்களின் கொடுமையை வார்த்தையில் விவரிக்க முடியாது. அதுபோன்ற துயரங்கள் தனக்கும் நேர்ந்துள்ளதாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பதிவிட்டுள்ளார்.

    நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தமிழில் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானார். விக்ரம் வேதா படம் இவருக்கு தமிழில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

    தொடர்ந்து, சில தமிழ் படங்களில் நடித்த ஷ்ரத்தா, கடைசியாக தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார்.

    அண்மையில், கொரோனாவால் தனிமைப்பட்டு இருப்பதாக வெளியான செய்தியை நடிகை ஷ்ரத்தா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    யு டர்ன்

    யு டர்ன்

    ஜம்மு காஷ்மீரில் உள்ள உதாம்பூரில் பிறந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கோஹினூர் படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். 2016ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான யு டர்ன் திரைப்படம் தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து, இந்தியா முழுவதும் அவரை அறியப்படுத்தியது.

    தமிழில்

    தமிழில்

    தொடர்ந்து பல கன்னட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2017ம் ஆண்டு மனிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத், அதே ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    நேர்கொண்ட பார்வை

    நேர்கொண்ட பார்வை

    மேலும், இவன் தந்திரன், ரிச்சி, கே 13 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் இந்தி பிங்க் படத்தில் டாப்சி நடித்த லீடு ரோலில் நடித்து அசத்தினார்.

    நிர்பயா வெப்சீரிஸ்

    நிர்பயா வெப்சீரிஸ்

    நிர்பயா வழக்கு தொடர்பான வெப் சீரிஸ் ஒன்றை சமீபத்தில் பார்த்து அதிர்ந்து போன நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனக்கும் கூட்டமான பேருந்துகளில் பயணித்த போது பல கொடுமைகள் நடந்துள்ளது என்றும், அது மிகவும் மோசமான நாட்கள் என நீண்டதொரு பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கூட்டமான பஸ்

    கூட்டமான பஸ்

    கூட்டமான பஸ்ஸில் தினம் தினம் நாடு முழுவதும் லட்சக் கணக்கான பெண்கள் அனுபவித்து வரும் கொடுமை தனக்கும் நடந்துள்ளதாக நடிகை ஷ்ரத்தா கூறியுள்ளார். சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில், கூட்டமான பேருந்துகளில் பயணப்படுவது என்பது போருக்கு போவது போல் இருக்கும் என்றும், யாரேனும் சில்மிஷம் செய்வார்களோ என்ற அச்சம் இருந்துக் கொண்டே இருக்கும் என்றுள்ளார்.

    பிரைவேட் பஸ்

    பிரைவேட் பஸ்

    நிர்பயா வழக்கு தொடர்பான வெப் சீரிஸில் பிரைவேட் பஸ்ஸில் அந்த பெண் பலாத்காரம் செய்யப்படுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். கூட்டமான பேருந்தில் செல்வதை தவிர்க்க, பல முறை அதுபோன்ற பிரைவேட் பஸ்களில் தான் தானும் பயணித்துள்ளேன். இப்போது அதை பார்க்க பழைய பயம் மீண்டும் எழுகிறது என பதிவிட்டுள்ளார்.

    மாறாத நிலை

    மாறாத நிலை

    "பேருந்துகளில் ஸ்த்ரீகள் இஸ்திரி போடப்படுகின்றனர்" என்ற கவிதை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. என்ன தான் நாடு முன்னேறினாலும், தினமும் அரசு பேருந்தில், பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களுக்கு செல்லும் பெண்கள் இது போன்ற சில்மிஷ துயரங்களை அனுபவித்துக் கொண்டே தான் இருக்கின்றனர். நடிகையாக தான் மாறி விட்டதால், பஸ்களில் பயணிப்பதை இப்போது தவிர்க்க முடிகிறது என்று ஷ்ரத்தா கூறியுள்ளார்.

    அடுத்தடுத்து

    அடுத்தடுத்து

    தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இறுதியாக நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத், அடுத்ததாக விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகி வரும் மாறா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான சார்லி படத்தின் ரீமேக் தான் மாறா.

    English summary
    Shraddha Srinath shared on her social networking page that she used travel by bus while she was studying law and she hated them because it used to be crowded.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X