'கவலைப்படாதே, கடவுள் மன்னிப்பார்' அப்ப இருந்துதான் பெண்ணியவாதியா மாறினேன்..பிரபல நடிகை பிளாஷ்பேக்!

By

சென்னை: தான் பெண்ணியவாதியாக மாறியது எப்போது என்று கூறியுள்ளார் பிரபல நடிகை.

Recommended Video

தமிழ்ப் பாடலுக்கு பாலிவுட் ஹீரோயின் டான்ஸ்! - வீடியோ

கன்னடத்தில் வெளியான யு டர்ன் படம் மூலம் கவனிக்கப்பட்டவர் நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத். தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கிய இவன் தந்திரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதில், கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர்.

விஷாலின் சக்ரா

விஷாலின் சக்ரா

அடுத்து, மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
பின்னர் மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா, ரிச்சி, கே 13, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் ஸ்ரத்தா ஶ்ரீநாத், இப்போது, விஷால் நடிக்கும் சக்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ரெஸ்டாரென்ட்

ரெஸ்டாரென்ட்

இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் ரெஸ்டாரென்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அதில், ஒரு ரெஸ்டாரென்டை விட சின்னதாக இருக்கலாம். ஆனால் ஒரு ஓட்டலை விட கொஞ்சம் பெரிதுதான். கண்டிப்பாக நல்ல உணவு இங்கே கிடைக்கும்' என்று கூறியிருந்தார்.

பெண்ணியவாதி

பெண்ணியவாதி

லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடும் அவர், தான் எப்போது பெண்ணியவாதியாக மாறினேன் என்று இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். அதை நெட்டிசன்கள் பலர் வரவேற்றுள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கவலையோடு சொன்னேன்

கவலையோடு சொன்னேன்

அப்போது எனக்கு 14 வயது. குடும்ப பூஜை ஒன்று நடந்து கொண்டிருந்தது. திடீரென்று எனக்கு மாதவிடாய். அருகில் அம்மா இல்லை. என் அத்தைக்கு அருகில் சென்று அமர்ந்தேன். என்னிடம் சானிடரி பேட் இல்லை. விஷயத்தை கவலையோடு சொன்னேன். அருகில் இருந்த இன்னொரு பெண், என் கவலையைக் கண்டு சொன்னார், 'மாத விடாய் நேரத்தில் பூஜையில் இருந்ததற்காகக் கவலைப்படாதே, குழந்தை. கடவுள் உன்னை மன்னிப்பார்' என்று.

நம்பிக்கை அற்றவள்

நம்பிக்கை அற்றவள்

அப்போதிருந்துதான் பெண்ணியவாதியாக மாறினேன். நம்பிக்கை அற்றவளாகவும் ஆனேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். உங்கள் மீது அன்புகொள்ள அதிகக் காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றனர் என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X