நேர்கொண்ட பார்வை.. சிறந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் .. விருதுங்கோ!
சென்னை: நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
கோகினுர் என்ற மலையாள படம் முலம் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பின் கன்னடத்தில் நடித்து தான் அனைவருக்கும் தெரிந்தார். கன்னடத்தில் இவர் அறிமுகமான யூ டர்ன் திரைப்படம் அங்கு மிகப் பெரிய வெற்றி பெற்றது.

பின் அங்கே நடித்து கொண்டு இருந்த ஷ்ரத்தா, பின்னர் தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்து பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு தமிழில் ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.
இப்படத்தில் வரும் யாஞ்சி யாஞ்சி பாடல் அனைவரின் மொபைல் ரிங்டோன் ஆக இருந்தது. இப்பாடலில் க்யூடாக நடித்து இருப்பார் ஷ்ரத்தா. பின் அதே வருடத்தில் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பின் தெலுங்கில் நானி நடித்த ஜர்சி படத்தில் அறிமுகமானார்.

இப்படம் அங்கு அவருக்கு நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்று தந்தது. பின் தமிழில் அஜித் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் இப்படம் கடந்த வருடத்தின் மெகா ஹிட் ஆக அமைந்தது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்தில் நடிக்க எந்த ஒரு நடிகையும் முதலில் ஒரு கணம் தயங்குவார். இன்றைய சூழலில் பெண்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை தோலுரித்து இயக்குனர் காட்டியிருப்பார். அதே சமயத்தில் அப்படிப்பட்ட பெண்கள் தவறானவர்கள் அல்ல என்பதையும் இந்த படத்தின் வாயிலாக தெரிவித்திருப்பார்.

தற்போது ஜே. எஃப். டபள்யூ என்ற தனியார் பத்திரிகை நிறுவனம் நடத்திய சினிமா விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான கிரிட்டிக்ஸ் விருதை நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தற்காக ஷ்ரத்தா ஸ்ரீநாதிற்கு வழங்கப்பட்டது. ஆர் ஜே பாலாஜி இந்த விருதை அவருக்கு வழங்கினார், இந்த புகைப்படங்கள் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது. மேலும் தல அஜித் படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்து இருப்பது மிகவும் பெருமை அடைகிறேன் என்றார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.


Click it and Unblock the Notifications











