ஆபாச படம்: ஸ்ராவியா புகாரை மறுக்கும் இயக்குனர் நடிகை ஸ்ராவியாவை வைத்து நாங்கள் ஆபாசப் படம் ஏதும் எடுக்கவில்லை. அவார்டு படம் தான் எடுத்துள்ளோம் என்று தீண்டத் தீண்ட பட இயக்குனர் முகன்கூறியுள்ளார்.தீண்டத் தீண்ட படத்தின் நாயகியான ஸ்ராவியாவும், அவரது தாயார் கெளரியும் சமீபத்தில் பரபரப்புப் பேட்டி அளித்தனர். அதில் ஸ்ராவியாவை வைத்து ஆபாசப் படம்எடுத்து வைத்துக் கொண்டு இயக்குனர் முகனும், கதாநாயகனும் மிரட்டுவதாக புகார் கூறியிருந்தனர்.தனது மகளை வாழை இலையில் படுக்க வைத்து படு ஆபாசமான முறையில் படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு இருவரும் மிரட்டுவதாகக் கூறினர்.இந்தப் புகாரை முகன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,ஸ்ராவியாவும், அவரது தாயாரும் கூறியுள்ள புகார்கள் முற்றிலும் பொய்யானவை. அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை.நான் அவரை வைத்து ஆபாசப் படம் எடுக்கவில்லை. அவார்டுப் படம்தான் எடுக்கிறேன். சிகரெட் பிடிக்கும் ஒருவன் அதை அணைக்காமல் தூக்கிப் போட்டதால் ஒருகிராமமே எரிந்து சாம்பலாகிறது. சிகெரட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விளக்குவதே இப்படத்தின் கதையாகும்.உண்மை இப்படி இருக்க தன்னை வைத்து ஆபாசப் படம் எடுத்து விட்டதாக அபாண்டமாக கூறியிருக்கிறார் ஸ்ராவியா. அவரது தொப்புள் தெரிகிற மாதிரி ஒரு காட்சிஇருந்தால் கூட நான் சினிமாவை விட்டு விலகிக் கொள்கிறேன். (ஆனா தொப்புள் தவிர வேற எல்லாம் தெரியுதே, மிஸ்டர் முகன்!).இப்படத்தை எடுத்து முடிக்க நாங்களாகப் போய் ஸ்ராவியாவிடம் பணம் கேட்கவில்லை. பெரிய ஹீரோயினாக வர வேண்டும் என்ற வெறியில்தான் அவராகவேபணத்தைக் கொடுத்தார். ஆனால் இடையில் அவர் ஒரு அழகிப் போட்டியில் ஜெயித்து விட்டார்.அதன் பின்னர் அவரது நிலையில் மாற்றம் தெரிந்தது. இதுமாதிரியான சின்னப் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார்.மேலும், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு மிரட்டவும் ஆரம்பித்தார். பணத்தைக் கொடுக்காவிட்டால் எனது குழந்தையை கடத்திச் சென்று விடுவதாகஅவரது அண்ணன் மிரட்டினார். இப்படி ஒரு அசிங்கமான சிந்தனை வேறுயாருக்கும் வராது.பல லட்சம் செலவு செய்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஸ்ராவியாவால் இப்போது படம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு நஷ்ட ஈடாக அவர் ரூ. 25 லட்சம்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன் என்றார் முகன்.பலான படம்: இயக்குனர் மீது நடிகை புகார்!

By Staff

நடிகை ஸ்ராவியாவை வைத்து நாங்கள் ஆபாசப் படம் ஏதும் எடுக்கவில்லை. அவார்டு படம் தான் எடுத்துள்ளோம் என்று தீண்டத் தீண்ட பட இயக்குனர் முகன்கூறியுள்ளார்.

தீண்டத் தீண்ட படத்தின் நாயகியான ஸ்ராவியாவும், அவரது தாயார் கெளரியும் சமீபத்தில் பரபரப்புப் பேட்டி அளித்தனர். அதில் ஸ்ராவியாவை வைத்து ஆபாசப் படம்எடுத்து வைத்துக் கொண்டு இயக்குனர் முகனும், கதாநாயகனும் மிரட்டுவதாக புகார் கூறியிருந்தனர்.

தனது மகளை வாழை இலையில் படுக்க வைத்து படு ஆபாசமான முறையில் படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு இருவரும் மிரட்டுவதாகக் கூறினர்.

இந்தப் புகாரை முகன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,

ஸ்ராவியாவும், அவரது தாயாரும் கூறியுள்ள புகார்கள் முற்றிலும் பொய்யானவை. அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை.

நான் அவரை வைத்து ஆபாசப் படம் எடுக்கவில்லை. அவார்டுப் படம்தான் எடுக்கிறேன். சிகரெட் பிடிக்கும் ஒருவன் அதை அணைக்காமல் தூக்கிப் போட்டதால் ஒருகிராமமே எரிந்து சாம்பலாகிறது. சிகெரட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விளக்குவதே இப்படத்தின் கதையாகும்.

உண்மை இப்படி இருக்க தன்னை வைத்து ஆபாசப் படம் எடுத்து விட்டதாக அபாண்டமாக கூறியிருக்கிறார் ஸ்ராவியா. அவரது தொப்புள் தெரிகிற மாதிரி ஒரு காட்சிஇருந்தால் கூட நான் சினிமாவை விட்டு விலகிக் கொள்கிறேன். (ஆனா தொப்புள் தவிர வேற எல்லாம் தெரியுதே, மிஸ்டர் முகன்!).

இப்படத்தை எடுத்து முடிக்க நாங்களாகப் போய் ஸ்ராவியாவிடம் பணம் கேட்கவில்லை. பெரிய ஹீரோயினாக வர வேண்டும் என்ற வெறியில்தான் அவராகவேபணத்தைக் கொடுத்தார். ஆனால் இடையில் அவர் ஒரு அழகிப் போட்டியில் ஜெயித்து விட்டார்.

அதன் பின்னர் அவரது நிலையில் மாற்றம் தெரிந்தது. இதுமாதிரியான சின்னப் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார்.

மேலும், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு மிரட்டவும் ஆரம்பித்தார். பணத்தைக் கொடுக்காவிட்டால் எனது குழந்தையை கடத்திச் சென்று விடுவதாகஅவரது அண்ணன் மிரட்டினார். இப்படி ஒரு அசிங்கமான சிந்தனை வேறுயாருக்கும் வராது.

பல லட்சம் செலவு செய்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஸ்ராவியாவால் இப்போது படம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு நஷ்ட ஈடாக அவர் ரூ. 25 லட்சம்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன் என்றார் முகன்.

பலான படம்: இயக்குனர் மீது நடிகை புகார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X