கேன்சருக்கு சிகிச்சைப் பெற்றுவந்த.. பிரபல ஹாலிவுட் அனிமேஷன் பட இயக்குனர் கெல்லி அஸ்பரி மரணம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம் அடைந்திருப்பது சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் கெல்லி அஸ்புரி. ஸ்பிரிட்: ஸாடாலியன் ஆஃப் த சிமர்ரான், ஸ்ரக் 2 ஆகிய அனிமேஷன் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தவர்.

அக்லி டால்ஸ், ஸ்மர்ஃப்: த லாஸ்ட் வில்லேஜ் உட்பட மேலும் சில அனிமேஷன் படங்களையும் இயக்கியுள்ளார்.
பல அனிமேஷன் படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் ஸ்டோரி, திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த சில வருடங்களாக அதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 60. இதையடுத்து அவருடன் பணியாற்றிய சினிமா கலைஞர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'இசைட் அவுட்' படத்தின் ரைட்டர் வெளியிட்டுள்ள இரங்கலில், இந்த செய்தியை கேள்விபட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். கெல்லியை எல்லோரும் விரும்பினார்கள். நாங்கள் இணைந்து பிரின்ஸ் ஆப் எகிப்து என்ற படத்தில் இணைந்து பணியாற்றினோம். அவர் ஒரு ஜாம்பவான். அவரை அதிகமாக இழப்பேன். அமைதியாக ஓய்வெடுங்கள் நண்பரே' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











