''கள்ளப் பயலே கள்ளப் பயலே... மொசக்குட்டி''!
சென்னை: மொசக்குட்டி.. எல்லோரும் செல்லமாக கொஞ்சும் ஒரு வார்த்தை இது... இதையே படத் தலைப்பாக்கியுள்ளனர்.
இந்த அழகான தலைப்பு கொண்ட அந்தப் படத்தில் ஷ்ரேயா கோஷலின் அழகான பாடல் ஒன்றும் இடம் பெறுகிறது.
பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவரான ஷ்ரேயாவின் குரலில் இந்தப் பாட்டு படு க்யூட்டாக வந்துள்ளதாம்.

மைனா.. மைனா
ஷ்ரேயா கோஷலின் ஹிட் பாடல்களை எடுத்து விட்டால் பெரிய்ய்ய லிஸ்ட்டாக அது இருக்கும். மைனா படத்தில் அவர் பாடிய நீயும் நானும் பாடல் மறக்க முடியாத மெலடித் தென்றல்களில் ஒன்று.

சாட்டையின் சகாயனே...
அதேபோல சாட்டை படத்தில் இடம் பெற்ற சகாயனே பாடலும் சூப்பர் ஹிட் வரிசையில் சேர்ந்த ஒன்றுதான்.

இப்ப மொசக்குட்டி
தற்போது மொசக்குட்டிக்காக ஒரு அழகிய பாடலைப் பாடியுள்ளார் ஷ்ரேயா கோஷல்.

கள்ளப் பயலே... கள்ளப் பயலே..
கள்ளப் பயலே கள்ளப் பயலே என்று ஆரம்பிக்கிறது இந்தப் பாடல். ரமேஷ் விநாயகம் இசையில் ஷ்ரேயா இந்தப் பாடலை பாடியுள்ளாராம்.

மகிமாதான் நாயகி
இந்தப் படத்தின் நாயகி பெயர் மகிமா. சோழவந்தான் அருகே நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறதாம். பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் என நிறையப் பேர் நடித்துள்ளனர்.

மயிலு ஜீவன்
படத்தை இயக்கியுள்ளவர் எம்.ஜீவன். இவர் ஏற்கனவே மயிலு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆவார். மைனா, சாட்டை போன்ற சூப்பரான கதையம்சத்துடன் கூடியதாக மொசக்குட்டி உருவாகி வருகிறது என்கிறார் படத் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்.


Click it and Unblock the Notifications











