அம்மா ஆகப் போகிறேன்.. சந்தோஷத்தில் ஸ்ரேயா கோஷல்.. கருவை சுமந்திருக்கும் புகைப்படம் வெளியீடு!

சென்னை: பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் சீக்கிரமே தான் அம்மாவாகப் போகிறேன் என்கிற சந்தோஷமான விசயத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

வரும் மார்ச் 12ம் தேதி வந்தால் தனது 37வது பிறந்தநாளை கொண்டாட காத்திருக்கும் ஸ்ரேயா கோஷல் முதன் முறையாக கருவுற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ம் ஆண்டு சிலாதித்யா முகோபாத்யாயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பாலிவுட்டில் அறிமுகம்

பாலிவுட்டில் அறிமுகம்

2000ம் ஆண்டு ஜி டிவியில் வெளியான சரிகம எனும் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் ஸ்ரேயா கோஷல். அப்போது இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் கவனத்தை இவர் ஈர்த்த நிலையில், பாலிவுட் படங்களில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாலிவுட் பாடல்களை பாடியுள்ளார்.

4 தேசிய விருதுகள்

4 தேசிய விருதுகள்

2002ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீக்‌ஷித் நடிப்பில் வெளியான தேவ்தாஸ் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா, நேபாளம், பாகிஸ்தானி, துலு, பெங்காலி போஜ்பூரி என பல மொழிகளில் பாடிய இவர் இதுவரை 4 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

முன்பே வா என் அன்பே வா

முன்பே வா என் அன்பே வா

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா அன்பே வா பாடல் இவர் குரலில் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் இவரது குரலுக்கு அடிமையாக்கியது. பூக்களே சற்று ஓய்வெடுங்கள், சொல்லிட்டாளே அவ காதலை, மெர்சல் படத்தின் நீதானே நீதானே மற்றும் கோப்ரா படத்தின் தும்பி துள்ளல் என ஏகப்பட்ட தமிழ் பாடல்களையும் பாடியுள்ளார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

கடந்த 2015ம் ஆண்டு பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது பால்ய சிநேகிதனான சிலாதித்யா முகோபாத்யாயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஸ்ரேயா கோஷலின் திருமண புகைப்படங்கள் அப்போது இணையத்தில் மின்னல் வேகத்தில் வைரலாகின. சினிமா உலகினர் பலரும் மணமக்களை வாழ்த்தினர்.

அம்மாவாக போகிறேன்

அம்மாவாக போகிறேன்

இந்நிலையில், தற்போது ஸ்ரேயா கோஷல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருவை சுமந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, சீக்கிரமே அம்மாவாக போகிறேன். குட்டி ஸ்ரேயா ஆதித்யா வரப் போகிறது. நானும் என் கணவரும் இந்த சந்தோஷமான விசயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ரொம்பவே ஹேப்பி என பதிவிட்டுள்ளார்.

குவிகிறது வாழ்த்து

குவிகிறது வாழ்த்து

சுமார் 21.5 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள ஸ்ரேயா கோஷல் தான் அம்மாவாக போகிறேன் என்கிற செய்தியை இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில், வெறும் சில மணி நேரங்களிலேயே பல லட்சம் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஏகப்பட்ட பிரபலங்கள் கமெண்ட் செக்‌ஷனில் ஸ்ரேயாவை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X