Shreya Ghoshal: அந்த கில்மா பாடலை பாடியதற்காக வெட்கபடுகிறேன்.. வருந்தும் ஸ்ரேயா கோஷல்!

மும்பை: இந்திய சினிமாவில் கிளாமர் பாடல்களுக்கு என்றுமே வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படத்தில் கூட இரண்டு பாடல்கள் கிளாமர் பாடல்களாக இருந்தது. இந்த கிளாமர் பாடல்களுக்கு படத்தில் நடிக்கும் நடிகைகளும் ஆடுவார்கள், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி படத்தின் அடையாளமாக மாறிப்போகும் நடிகைகளும் உள்ளார்கள். அப்படி புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் சமந்தாவும், ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் தமன்னாவும் ஆடியுள்ளார்கள். இந்நிலையில் தான் பாடிய ஒரு கிளாமர் பாடலுக்காக வருத்தப்படுவதாக பாடகி ஸ்ரேயா கோஷல் கூறியுள்ளார்.

கிளாமர் பாடல்கள் என்பது முன்பெல்லாம் நடனத்திலும் உடை அலங்காரத்திலுமே இருந்தது. ஆனால் காலங்கள் மாற மாற, கிளாமர் பாடலின் பாடல் வரிகளும் பெரும், தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முன்பெல்லாம் கிளாமர் பாடல்கள் பாடுபவர்கள் தங்கள் குரலை ரசிகர்களை கிரங்கடிக்கும் குரலாக மாற்றி பாடுவார்கள். அந்த நிலை இப்போது பாடல் வரிகளிலேயே கில்மா வரிகளை பயன்படுத்தி பாடல்கள் உருவாக்கப்படுகிறது.

Shreya Ghoshal Chikni Chameli Agneepath

உதாரணத்திற்கு புஷ்பா 2 படத்தில் இடம் பெற்றுள்ள ஃபீலிங்ஸ் பாடல். இந்தப் பாடலின் வரிகளை பார்த்தால் புரியும். வரிகளே கில்மாவாக இருந்தால் வரிகளைக் கடந்து கிளாமராக நடித்தால் தான் தனது நடிப்பு பேசப்படும் என ராஷ்மிகா மந்தனா நினைத்தாரோ என்னவோ. புஷ்பா 2 படத்தில் இடம் பெற்ற கவர்ச்சிப் பாடலை விட ராஷ்மிகா மந்தனாவின் கிளாமர் ஓவராக இருக்கும். அதாவது கிளாமர் பாடலில் நடனமாடிய ஸ்ரீ லீலாவை விட படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா ஓவர் கிளாமர் காட்டியிருப்பார்.

Shreya Ghoshal Chikni Chameli Agneepath

ஸ்ரேயா கோஷல்: இப்படி இருக்கும்போது, இந்தியாவில் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். இவர் தான் பாடிய ஒரு கில்மா பாடலை நினைத்து தான் வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவர் கூறும்போது, " அக்னி பாத் படத்தில் இடம்பெற்றுள்ள சிக்னி சமேலி என்ற ஐட்டம் பாடலை சிறு குழந்தைகள் கூட பாடலின் அர்த்தம் என்ன எனத் தெரியாமல் பாடுகிறார்கள். அப்பாடலை பாடிக் கொண்டு நடனமும் ஆடுகிறார்கள். மேலும் இந்தப் பாடல் ரொம்பவும் நன்றாக உள்ளது என என்னிடமே கூறுகிறார்கள்.

Shreya Ghoshal Chikni Chameli Agneepath

வருத்தம்: மேலும், உங்களுக்காக இந்த பாடலை பாடுவேன் என்று எல்லாம் கூறுகிறார்கள். யாராவது இவ்வாறு கூறினால் எனக்கு சங்கடமாக உள்ளது. 5, 6 வயது குழந்தைகள் இதுபோன்ற பாடல் வரிகளைப் பாடுவது சரியல்ல. இந்தப் பாடலை பாடியதற்காக நான் வெட்கப்படுகிறேன்" எனக் கூறியுள்ளார். ஸ்ரேயா கோஷல் இவ்வாறு கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கூட நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா, புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை பாடியதற்காக வருத்தப்படுவதாக தெரிவித்தார். இந்தப் பாடலும் கில்மா பாடல்தான்.

478 மில்லியன்: ஸ்ரேயா கோஷல் குறிப்பிட்டுள்ள படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் ஹிர்திக் ரோஷன் கதாநாயகனாக நடித்தார். சிக்னி சமேலி பாடலில் கத்ரினா கைஃப் நூற்றுக்கணக்கான ஆண்களுக்கு மத்தியில் ஐட்டம் டான்ஸ் ஆடியிருப்பார். இந்த பாடலின் வீடியோவை யூடியூப் தளத்தில் இதுவரை, 478 மில்லியன் முறை பார்த்துள்ளார்கள்.

Shreya Ghoshal Chikni Chameli Agneepath

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X