Don't Miss!
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- News
கடைசி பஸ் வருவதற்கு முன்பே கிளம்பிய விமானம்.. பயணிகள் கடும் அவதி.. ரூ.10 லட்சம் ஃபைன் போட்ட டிஜிசிஏ!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அம்மாவை போலவே செம க்யூட்… முதன்முறையாக மகனின் போட்டோவை வெளியிட்ட பிரபல பாடகி !
சென்னை : பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இம்ரான் ஹாஸ்மி, ஷங்கர் மகாதேவன், தேவி ஸ்ரீபிரசாத் ஹாரிஸ் ஜெயராஜ், டி,இமான் உள்ளிட்ட இசையமைப்பாளரின் இசையில் அதிகப் பாடல் பாடியுள்ளார் ஸ்ரேயா.
ஓடிடியில் ரிலீசாகும் சமுத்திரக்கனியின் படம்... முதல் பார்வையை வெளியிட்ட தனுஷ்
ஸ்ரேயா கோஷல் குரலுக்காக மட்டுமல்லாமல் அவரது அழகுக்காகவும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் அவருக்கு உண்டு.

மந்திர குரல்
தனது மந்திர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட இசை ராட்சசி ஸ்ரேயா கோஷல் இசை உலகில் ராணியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். 2002ம் ஆண்டு வெளியான தேவ்தாஸ் படத்தில் 10 பாடல்களை பாடினார். இதில் "பயிரி பியா" என்ற பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை வென்றார்.

பல விருதுகள்
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராட்டி போன்ற மொழிகளில் பாடல்களை பாடி உள்ளார். இவர் இதுவரை 4 தேசிய விருதுகளையும், முன்பே வா அன்பே வா பாடலுக்காக தமிழக அரசின் விருதை வென்றார் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

ஏராளமான பாடல்கள்
வெயில் படத்தில் இடம் பெற்ற உருகுதே மருகுதே, சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் வரும் முன்பே வா அன்பே வா, 7ஜி ரேயின்போ காலனி திரைப்படத்தில் வரும் நினைத்து நினைத்து பார்த்தால் என்று வரிசைகட்டி சொல்லிக்கொண்டே போகலாம் . அத்தனை பாடல்களும் தேன் கீதமாக காதில் பாயும்.

க்யூட் பேபி
2015ம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது. ஆறு மாதங்களாக குழந்தையின் முகத்தை காட்டாமல் வைத்திருந்த ஸ்ரேயா தற்போது, தனது மகனின் க்யூட் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு லைக்களை அள்ளி உள்ளார். இந்த புகைப்படங்களுக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.