ரொம்ப சந்தோஷம், பாடம் கத்துக்கிட்டேன்: விமான நிறுவனத்தை விளாசிய பிரபல பாடகி
மும்பை: இசைக் கருவிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்காத விமான நிறுவனத்தை ட்விட்டரில் விளாசியுள்ளார் பாடகி ஸ்ரேயா கோஷல்.
இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் பாடி வருபவர் ஸ்ரேயா கோஷல். அவர் இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
இந்நிலையில் அவர் பிரபல விமான நிறுவனம் மீது அதிருப்தி அடைந்து ட்வீட் செய்துள்ளார்.
விமானம்
இசை கலைஞர்கள் அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்கள் தங்களின் இசைக் கருவிகளை எடுத்துச் செல்ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அனுமதிப்பு இல்லை போன்று. நன்றி. பாடம் கற்றுக் கொண்டேன் என்று காட்டமாக ட்வீட் செய்தார் ஸ்ரேயா.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
ஸ்ரேயா கோஷலின் ட்வீட்டை பார்த்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், அவரின் புகார் குறித்த விபரங்களையும், விமான நிறுவனத்தினர் என்ன அறிவுரை வழங்கினார்கள் என்பதையும் தெரிவிக்குமாறு கேட்டுள்ளது.
ஆறுதல்
பப்ளிசிட்டிக்காக ட்வீட் போடுபவர் அல்ல ஸ்ரேயா கோஷல். அவர் நிஜமாகவே பாதிக்கப்பட்டுள்ளதால் தான் காட்டமாக ட்வீட் செய்துள்ளார். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது என்று ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
பாடல்
விமான நிறுவனம் செய்த காரியத்தால் மூட் அவுட்டாகி ட்வீட் போட்ட ஸ்ரேயாவுக்கு ரசிகர் ஒருவர் இப்படியும் பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











