எப்ப நடிகையா அறிமுகமாகப் போறீங்க? பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலிடம் ரசிகர்கள் கேள்வி!
மும்பை: படங்களில் நடிப்பது பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பதிலளித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார்.
அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

முன்பே வா என் அன்பே
தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் செம பிஸியாகப் பாடிக் கொண்டிருக்கும் ஸ்ரேயா கோஷல், தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), இளங்காத்து வீசுதே (பிதாமகன்), முன்பே வா என் அன்பே வா (சில்லுனு
ஒரு காதல்), அய்யய்யோ (பருத்தி வீரன்), உருகுதே மருகுதே (வெயில்) என பல மெலடிகளை பாடியிருக்கிறார்.

நீயும் நானும்
பசங்க படத்தில் வரும் ஒரு வெட்கம் வருதே, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மன்னிப்பாயா, மைனா படத்தின், நீயும் நானும், அங்காடி தெரு படத்தின் உன் பேரை சொல்லும் போதே, ரஜியின் எந்திரன் படத்தில் காதல் அணுக்கள் என அவர் பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதிக ரசிகர்கள்
இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார். குரலுக்காக மட்டுமல்லாமல் அழகுக்காகவும் அதிக ரசிகர்களைக் கொண்டவர் இவர். இந்தி, தெலுங்கில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தும் அவர் மறுத்துவிட்டார். பாடுவது மட்டுமே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

அதுவாக நடந்தால்
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது பத்து வருடக் காதலர் ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் இப்போது அளித்த பேட்டி ஒன்றில் நடிப்பது பற்றி கூறியுள்ளார். அதுபற்றிய கேள்விக்கு, இயல்பாக அதுவாக நடந்தால், படங்களில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











