அனலடிக்குது எஞ்சாமி.. இணையத்தை கலக்கும் தீ.... ஓடி வந்து நல்ல வார்த்தை சொன்ன ஷிரேயா கோஷல்!
சென்னை : இணையத்தில் ஹிட்டடித்து டிரெண்டிங் ஆகி உள்ளது பாடல் எஞ்சாய் எஞ்சாமி பாடல்.
Recommended Video
தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரும் விரும்பும் பாடலாக மாறி உள்ளது.
இப்பாடலை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், ஸ்ரேயா கோஷல் வெகுவாக பாராட்டி உள்ளார்.

மனதை கொள்ளை கொண்ட
தீ யின் மாயாஜாலக் குரலில், ஆங்கிலப் பாடலுக்கு இணையாக சந்தோஷ் நாராயண இசையமைத்தது, இப்பாடலுக்கு மேலும் மெருகேற்றி உள்ளது. கண்டா வரச் சொல்லுங்க பாடலில் நம் மனதை கொள்ளை கொண்ட சந்தோஷ் நாராயணனின் இப்பாடலிலும் பட்டையை கிளப்பி உள்ளார்.

மாஜா தளத்தில்
இந்த ஆல்பம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகவலைத்தளத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்பாடலை வெளியிட்டார். இண்டிபெண்டன்ட் கலைஞர்களுக்காக உருவாகி உள்ள மாஜா என்ற தளத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டது.

3 கோடி பார்வையாளர்கள்
இளைஞர்கள் இப்பாடலை எஞ்சாய் செய்து வரும் நிலையில் இப்பாடல், சமூக வலைத்தளத்தில் அனைவரையும் ரிப்பீட் மோடில் கேட்கவைத்துள்ளது. டிரெண்டிங் இருந்த இந்த ஆல்பம் சாங். தற்போது,3 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஸ்ரேயா கோஷல் பாராட்டினார்
விவசாயத்தையும், இயற்கையையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை பலத் திரைப்பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பாடகி தீயை வெகுவாக பாராட்டி உள்ளார். மேலும் இதுபோன்ற பல சாதனைகளை படைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











