ப்பா எவ்ளோ ஹாப்பி.. வயிற்றில் குழந்தையுடன் நீச்சல் அடித்த பிரபல பாடகி… வைரலாகும் பிகினி புகைப்படம்!

சென்னை: பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷலின் நீச்சல் குள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஷ்ரேயா கோஷல் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

இந்த புகைப்படம் எடுக்கும் போது அவர் கர்ப்பிணியாக இருந்தார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் ஃபேவரைட்

ஏ.ஆர். ரஹ்மான் ஃபேவரைட்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா அன்பே வா பாடல் இவர் குரலில் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் இவரது குரலுக்கு அடிமையாக்கியது. பூக்களே சற்று ஓய்வெடுங்கள், சொல்லிட்டாளே அவ காதலை, மெர்சல் படத்தின் நீதானே நீதானே மற்றும் கோப்ரா படத்தின் தும்பி துள்ளல் என ஏகப்பட்ட தமிழ் பாடல்களையும் பாடியுள்ளார். லேட்டஸ்ட்டாக ரிலீஸ் ஆகி உள்ள நம்பிக்கை ஆந்தம் பாடலிலும் அவர் பாடியுள்ளார்.

லவ் மேரேஜ்

லவ் மேரேஜ்

கடந்த 2015ம் ஆண்டு பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது பால்ய சிநேகிதனான சிலாதித்யா முகோபாத்யாயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

கடந்த மார்ச் மாதம் தான் கருவுற்றிருந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்ற ஷ்ரேயா கோஷல் சமீபத்தில் ஆண் குழந்தைக்கு அம்மாவானார். தேவ்யான் என தனது குழந்தைக்கு அழகான பெயரினையும் சூட்டியுள்ளார்.

ஜாலி குளியல்

ஜாலி குளியல்

இந்திய இசை ரசிகர்களின் ஃபேவரைட் பாடகியான ஷ்ரேயா கோஷல் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம ஜாலியாக குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஷேர் செய்து அனைத்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

வயிற்றில் குழந்தை

வயிற்றில் குழந்தை

இந்த புகைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட த்ரோபேக் புகைப்படம் என குறிப்பிட்டுள்ள பாடகி ஷ்ரேயா கோஷல், நான் தண்ணீரில் மிதக்கிறேன். என் பையன் தேவ்யான் என் வயிற்றுக்குள் மிதக்கிறான் என கேப்ஷன் கொடுத்து இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குழந்தை உருவான சந்தோஷம்

குழந்தை உருவான சந்தோஷம்

கருவில் குழந்தை உருவான சந்தோஷத்தை கொண்டாடவே நீச்சல் குளத்தில் இப்படியொரு ஆட்டம் போட்டுள்ளாரா ஷ்ரேயா கோஷல் என இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், குழந்தை தேவ்யான் எப்படி இருக்கிறார் என்றும் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X