யாரும் நம்ப வேண்டாம்.. எல்லா முயற்சியும் வீண்.. பாடகி ஸ்ரேயா கோஷல் அதிர்ச்சி!

மும்பை: சமீப காலமாக பிரபலங்களின் சமூகவலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இதனால், நடிகர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். பிரபலங்களின் பெயரை வைத்து நடக்கும் மோசடிகளும் அதிகரிப்பதால், இதுபோன்ற விசயங்களில் மிகவும் இருக்க வேண்டிய சூழலும் உள்ளது. தனது மந்திர குரலால் ரசிகர்களை ஈர்த்த ஸ்ரேயா கோஷல் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு பதிவை போட்டுள்ளார். இதனால், ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இந்தியாவில் புகழ்பெற்ற பாடகியான ஸ்ரேயா கோஷல் இந்தி மொழியை தாய் மொழியாக கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் எந்த மொழியில் பாட வேண்டும் என்றாலும் அசால்ட்டாக பாடி முடிப்பவர். மறைந்த பாடகர் பாலசுப்ரமணியத்திற்கு பிடித்த பாடகர்களில் ஸ்ரேயா கோஷல் இடம்பிடித்துள்ளார். இவர், தமிழில் டி.இமான் இசையில் அதிக பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளார். ஸ்ரேயா கோஷல் பாடினால் காற்றிசைப்பது போன்று இருக்கும் என நெட்டிசன்கள் கதைக்கின்றனர்.

Shreya ghoshal X account indian singer

வருத்தம்: நிறைய இசைக்கச்சேரிகளை நடத்தி வரும் ஸ்ரேயா கோஷல், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு ஐட்டம் பாடலை பாடியதற்காக வருத்தப்படுகிறேன் என கூறியுள்ளார். அக்னி பாத் படத்தில் இடம்பெற்ற சிக்னி சமேலி என்ற ஐட்டம் பாடலை சிறு குழந்தைகள் கூட பாடலின் அர்த்தம் என்ன எனத் தெரியாமல் பாடுகிறார்கள். அப்பாடலை பாடிக்கொண்டு நடனமும் ஆடுகிறார்கள், பாடல் நன்றாக இருப்பதாக என்னிடமே தெரிவிப்பது எனக்கு சங்கடமாக உள்ளது எனக் கூறி வருத்தமடைந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. குழந்தைகள் மீதுள்ள அக்கறையை பார்த்து ரசிகர்களும் ஆச்சரியமடைந்தனர்.

கதறும் பிரபலங்கள்: சமீபகாலமாக திரையுலகில் இருப்பவர்களின் சமூகவலைதள கணக்குகள் முடக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சினிமா, அரசியல், பிசினஸ்மேன்கள் யாரையும் சைபர் குற்றவாளிகல் விட்டு வைப்பதில்லை. சமீபத்தில் நடிகை த்ரிஷா எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இந்தியில் ஸ்வரா பாஸ்கர் என தொடர்ந்து நீடிக்கிறது. நயன்தாராவும் இதே பிரச்னையில் சிக்கி தவித்தார்.

Shreya ghoshal X account indian singer

எக்ஸ் கணக்கு முடக்கம்: நடிகர், நடிகைகள் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்கள். அவர்கள் நடிக்கும் படம் மற்றும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என அனைத்தையும் இதில் வெளியிட்டு வருகின்றனர். சில நேரங்களில் லைவ்வில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் செய்து வியக்க வைக்கின்றனர். இந்நிலையில், பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் என்ன ஆச்சு மேடம் என ஆதரவாக கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.

Shreya ghoshal X account indian singer

யாரும் நம்ப வேண்டாம்: ஸ்ரேயா கோஷல் தனது இன்ஸ்டாகிராமில், தனது X தள கணக்கை யாரோ பிப்ரவரி 13ம் தேதியில் இருந்து ஹேக் செய்துவிட்டனர். கணக்கை மீட்க முயற்சி மேற்கொண்டாலும் முடியவில்லை என ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார். அதனால் தனது X பக்கத்தில் வரும் பதிவுகளை மற்றும் லின்க்-களை மற்றும் மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம் என அவர் எச்சரித்து இருக்கிறார். இதை கேட்டு ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இதை கேட்ட பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவாக பதில் அளித்து வருகின்றனர். காற்றிசை குரலுக்கு இப்படி ஒரு சோதனையா என வேதனையில் ரசிகர்கள் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X