என்னம்மா ஸ்ரேயா, பிகினியில் இந்த ஆட்டம் போடுறீங்களேம்மா: வைரல் வீடியோ
சென்னை: நடிகை ஸ்ரேயா பிகினியில் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
கோலிவுட், டோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்த நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த காதலர் ஆன்ட்ரே கோஸ்சீவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கணவருடன் சேர்ந்து புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடும் பழக்கம் இல்லாதவர் ஸ்ரேயா.
தன்னுடைய புகைப்படங்களை தான் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். ஸ்ரேயா பிகினி அணிந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டால் அவரின் அழகை பாராட்டுபவர்களே அதிகம்.
கல்யாணம் ஆன நடிகை இப்படி பிகினி அணியலாமா என்று நெட்டிசன்கள் ஸ்ரேயாவுக்கு லெக்சர் கொடுப்பது இல்லை. இந்நிலையில் ஸ்ரேயா ரோஸ் கலர் பிகினி(மோனோகினி) அணிந்து புகைப்படம் ஒன்றுக்கு முன்பு நின்று மனம்போன போக்கில் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவை பார்த்தவர்கள் வெயில் அதிகமாக இருப்பதால் ஸ்ரேயாவுக்கு நட்டு கழன்றுவிட்டதா என்று கிண்டல் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











