ஆஹா... என்னா வளைவு, என்னா நெளிவு... யூடியூப்பில் லைக்ஸ் குவிக்கும் ஸ்ரேயாவின் நயா நயா லவ் டான்ஸ்
சென்னை: நடிகை ஸ்ரேயா இந்தி படத்தில் ஆடியுள்ள குத்துப்பாடல் யூடியூப்பில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா.
இந்தி, தெலுங்கு, மலையள படங்களிலும் நடித்துவருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்துவந்தார்.

ஆச்சரியம்
எனக்கு திருமணமாகி, அதற்குள் கிட்டத்திட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் நடிப்பு எனக்கு முக்கியம். இன்னும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று என் கணவர் விரும்புகிறார் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். நடனம் எனக்குப் பிடிக்கும். அதனால் ஒரு பாடலுக்கு ஆடுவதை அதிகம் விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

சப் குஷல் மங்கள்
இந்நிலையில் அவர் சப் குஷல் மங்கள் என்ற இந்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். கரண் விஸ்வநாத் காஷ்யப் இயக்கும் இந்தப் படத்தில் அக்ஷய் கண்ணா, பத்மினி கோலாப்பூர், பிரியங்க் சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர்.
நயா நயா லவ்
இந்தப் படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் இடம்பெறும், நயா நயா லவ் என்று தொடங்கும் குத்துப்பாடலுக்கு ஸ்ரேயா ஆடியுள்ளார். இந்த வீடியோ பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் யூடியூப்பில் வெளியானது.

வரவேற்பு
இதில் உடலை வளைத்து, நெளித்து அவர் ஆடியுள்ள கிளாமர் ஆட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதை ஏராளமானோர் பார்த்து ரசித்துள்ளனர். சில ரசிகர்கள் ஸ்ரேயா இன்னும் ஹாட் என்றும் அவருக்காக மட்டுமே இந்த பாடலை பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











