ஸ்ரேயாவால் கலக்கத்தில் தெலுங்கு இளம் ஹீரோ
ஹைதராபாத்: ஸ்ரேயாவால் தெலுங்கு இளம் ஹீரோ ஒருவர் கலக்கத்தில் உள்ளாராம்.
ஸ்ரேயாவுக்கு தமிழில் மார்க்கெட் இல்லை. இந்நிலையில் அவர் சந்திரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தமிழில் ரிலீஸாகிறது. மேலும் அம்மணி தெலுங்கில் பாலியல் தொழிலாளியாக பவித்ரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படங்கள் தான் சரிந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என்று அவர் நம்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பவித்ரா படத்தால் தெலுங்கு இளம் ஹீரோ ஆதி கலங்கிப் போயுள்ளாராம்.

கவர்ச்சிப் புயல்
பவித்ரா படத்தில் ஸ்ரேயா கவர்ச்சியில் கலக்கி இருக்கிறாராம். படத்தில் ஸ்ரேயாவின் நடிப்பு பேசப்படும் என்று நம்பப்படுகிறது.

சுகமாருடுவை நம்பும் ஆதி
பிரபல தெலுங்கு நடிகர் சாய் குமாரின் மகன் ஆதி நடித்த 2 படங்கள் ஓடவில்லை. இந்நிலையில் அவர் நிஷா அகர்வாலுடன் ஜோடி சேரந்து சுகுமாருடு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமாவது ஓடட்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறார் ஆதி.

ஒரே நாளில் மோதும் பவித்ரா, சுகுமாருடு
ஆதி பெரிதும் எதிர்பார்க்கும் சுகுமாருடுவும், ஸ்ரேயாவின் பவித்ராவும் ஒரே நாளில் ரிலீஸாகிறது. எங்கே ஸ்ரேயாவின் கவர்ச்சிப் புயலில் சுகுமாருடு காணாமல் போய்விடுமோ என்று ஆதி பயப்படுகிறாராம்.


Click it and Unblock the Notifications











