அட அந்த விசேஷமாம்ல.. காதல் கணவருடன் செம ஹேப்பியில் நடிகை ஸ்ரேயா.. வாழ்த்தும் ஃபேன்ஸ்!

By

சென்னை: அந்த விசேஷத்தை முன்னிட்டு, நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

நடிகை ஸ்ரேயா சரண், ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவை காதலித்து சில வருடங்களுக்கு முன், திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பின்னும் நடித்து வரும் அவர், இந்த கொரோனா காலகட்டத்தில் கணவருடன் பார்சிலோனாவில் வசிக்கிறார்.

நினைவில்

நினைவில்

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று ஸ்பெயின், அங்கு பத்திரமாக வசித்து வரும், நிலையில் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் தருவார். இதில் டான்ஸ் மற்றும் முத்த வீடியோக்களும் அடங்கும். நடனமாடுவது ஸ்ரேயாவுக்கு கொள்ளைப் பிரியம் என்பதை, நினைவில் கொள்க.

லைவ்விலும் வருவார்

லைவ்விலும் வருவார்

கணவருக்கு செம ரொமான்ஸாக லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார், ஸ்ரேயா. இதற்கு ரசிகர்கள் ஜாலியான கருத்துக்களை பதிவிடுவார்கள். அடிக்கடி இன்ஸ்டாவில் போட்டோக்களை பதிவிடும் அவர், சில நேரம் லைவ்விலும் வருவார்.

கர்வா சௌத் வாழ்த்து

கர்வா சௌத் வாழ்த்து

அவர் இப்போது கணவருடன் இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில் கையில் மருதாணி அணிந்திருக்கிறார். அனைவருக்கும் கர்வா சௌத் (karva chauth) வாழ்த்துகள். பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள் என கூறியுள்ளார், நடிகை ஸ்ரேயா சரண்.

வரலட்சுமி நோன்பு மாதிரி

வரலட்சுமி நோன்பு மாதிரி

கர்வா சௌத் என்பது, திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் பண்டிகை. பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளை பெற காலை முதல் மாலை வரை விரதம் இருப்பார்கள் . நம்ம ஊர், வரலட்சுமி நோன்பு மாதிரி. வட இந்தியாவில் அந்த விசேஷ நாளாம் நேற்று. அதனால்தான் இந்த வாழ்த்து.

எப்ப வர்றதா உத்தேசம்

எப்ப வர்றதா உத்தேசம்

இதையடுத்து, நடிகை பூமிகா சாவ்லா அந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நெட்டிசன்ஸ்களும் ஸ்ரேயாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர், இப்படி வெளிநாட்டுலயே இருந்தா எப்படி? எப்ப இந்தியா வர்றதா உத்தேசம்? என்று கேட்டுள்ளனர். தமிழ் சினிமாவுல எப்ப பார்க்கலாம் என்றும் சிலர் கேட்டுள்ளனர்.

முக்கிய வேடம்

முக்கிய வேடம்

நடிகை ஸ்ரேயா, தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X