நடிகை ஸ்ரேயாவுக்கே இப்படியொரு நிலைமையா? ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்தும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்கலையே?

பெங்களூரு: ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த நடிகை ஸ்ரேயா இன்னும் அந்த படத்தை பார்க்க முடியவில்லை என சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளது ஆச்சர்யத்தை கிளப்பி உள்ளது.

ஷங்கரின் சிவாஜி படம் மூலம் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

குறைவான காட்சிகளே என்றாலும், அந்த கதாபாத்திரம் மிகவும் வலிமையான கதாபாத்திரம் ஆகும்.

ராஜமெளலி படத்தில் ஸ்ரேயா

ராஜமெளலி படத்தில் ஸ்ரேயா

சத்திரபதி படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிகை ஸ்ரேயா நடித்துள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தில் ஃபிளாஷ்பேக் கதாபாத்திரத்தில் அஜய்தேவ்கனுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் ஸ்ரேயா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏகப்பட்ட சுவாராஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

டிக்கெட் கிடைக்கல

டிக்கெட் கிடைக்கல

பெங்களூருவில் தற்போது படப்பிடிப்புக்காக இருந்து வரும் நடிகை ஸ்ரேயா, ஆர்ஆர்ஆர் படத்தை முதல் வாரத்தில் மும்பையில் பார்க்க முயற்சி செய்த நிலையில், அவருக்கே டிக்கெட் கிடைக்கவில்லையாம். அந்த அளவுக்கு ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுவது எனக்கு ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்றார்.

படம் பார்க்கல

படம் பார்க்கல

இன்னமும் தியேட்டர்கள் இங்கே கர்நாடகாவிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கின்றன. வார நாட்களில் படப்பிடிப்பு இருப்பதால் வார இறுதியில் தான் படத்தை பார்க்க வேண்டும். இன்னமும் ஆர்ஆர்ஆர் படத்தை நான் பார்க்கவில்லை. இந்த வார இறுதியில் தான் ரசிகர்களுடன் இணைந்து தியேட்டரில் படத்தை பார்க்கப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.

எதுவுமே தெரியாது

எதுவுமே தெரியாது

ராஜமெளலி சார் படம் என்றதுமே ஓகே சொல்லி கையெழுத்து போட்டு விட்டேன். படத்தின் கதை என்ன? யார் நடிகர்கள்? என எதுவுமே எனக்கு தெரியாது. அதன் பிறகு தான் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் என எல்லா டாப் நடிகர்களும் நடிக்கின்றனர் என்பதை அறிந்ததும் ஆச்சர்யத்தில் மிதந்தேன் என்றார்.

ராஜமெளலி மீது நம்பிக்கை இருக்கு

ராஜமெளலி மீது நம்பிக்கை இருக்கு

சின்ன கதாபாத்திரம், பெரிய கதாபாத்திரம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை. ராஜமெளலி படத்தில் நாம் இருக்கிறோம் என்பதே பெரிய விஷயம் தான். அவர் எப்போதுமே எந்தவொரு நடிகரையும் தவறாக காட்ட மாட்டார். வீணடிக்க மாட்டார் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு அதனால் தான் அவர் படத்தில் நடிக்க தாராளமாக ஓகே சொல்லி விடுகிறேன் என்றார்.

Recommended Video

என் கடைசி மூச்சு வரைக்கும்!! RAM CHARAN EMOTINAL Speech in RRR grand Pre-Release event
மீண்டும் அஜய் தேவ்கன்

மீண்டும் அஜய் தேவ்கன்

ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கன் உடன் இணைந்து நடித்த நடிகை ஸ்ரேயா மீண்டும் அவருடன் இணைந்து த்ரிஷ்யம் 2 இந்தி படத்தில் நடிக்க போகிறார். தற்போது பெங்களூருவில் கஸ்பா எனும் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. சினிமாவை தாண்டி தனது கணவர் ஆண்ட்ரே கோஸ்சீவ் மற்றும் மகள் ராதாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X