'இதுக்காகத்தான் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்தேன்?' நடிகை ஸ்ரேயா சொல்ற காரணத்தைப் பாருங்க!

By

சென்னை: நான் ஏன் என் காதலரை திருமணம் செய்தேன் என்று நடிகை ஸ்ரேயா வீடியோ மூலம் கிண்டலாக விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

Quarantine Paridhabangal | Shriya | Kushbhu | Shilpa shetty | Lock Down

தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா.

இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

ரஷ்ய தொழிலதிபர்

இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், திருமணமாகி, அதற்குள் கிட்டத்திட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.

படப்பிடிப்புகள்

படப்பிடிப்புகள்

இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறி வருகின்றனர்.

பால்கனி டான்ஸ்

பால்கனி டான்ஸ்

ஸ்ரேயா வித்தியாசமாக, டான்ஸ் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். ஆங்கில பாடலுக்கு பால்கனியில் நின்றுகொண்டு டான்ஸ் ஆட, அவர் கணவர் அதை வீடியோவாக எடுத்துள்ளார். அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டள்ள ஸ்ரேயா, பத்து நாட்களாக பார்சிலோனாவில் இருக்கிறேன். தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். உங்களையும் வீட்டில் உள்ள பெரியவர்களையும் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

பாத்திரம் தேய்க்கும் கணவர்

பாத்திரம் தேய்க்கும் கணவர்

இந்நிலையில் இப்போது புதிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், நான் ஏன் என் காதலரை திருமணம் செய்தேன் என்று கூறிவிட்டு அவரை காண்பிக்கிறார். அவர் கணவர் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கணவரும் மனைவிக்கு இப்படி உதவுங்கள் என்று கூறிவிட்டு ஆண்ட்ரிக்கு முத்தம் ஒன்றை, கிக்காகக் கொடுக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கல்யாணம் ஆகிடுச்சா?

கல்யாணம் ஆகிடுச்சா?

இதை சில ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். கொடுத்து வச்ச மாப்பிள்ளை என்றும், அப்படியே தண்ணிய அதிகமா செலவழிக்க சொல்லாதீங்க என்றும் அட்வைஸ் செய்துள்ளனர். இன்னும் சிலர், எல்லா ஹஸ்பன்ட்களும் இதைத்தான செய்றாங்க என்று கூறியுள்ளார். ஒரு ரசிகர், என்னது ஸ்ரேயாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? அப்ப என் வாழ்க்கை? என்று கலாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X