ஸ்ரேயா சரண்.. புருஷனாவே இருந்தாலும்.. பப்ளிக்கா இப்படி பண்ணலாமா!

மும்பை: தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைபடங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா சரண்

தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி தமிழில் முன்னணி நடிகையாகி பின் இந்தி திரையுலகில் உச்சம் தொட்டவர் தான் நடிகை ஸ்ரேயா சரன். தமிழில் தனது முதல் படமாக எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரேயா.

 Actress shriya saran her husband kissing pics

பின் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா. தமிழில் ஒரு பிரேக் கொடுத்த படம் மழை இப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. இந்த, படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

வருடத்திற்கு ஒரு தமிழ் படம் என்பது போல நடித்து வந்தார் ஸ்ரேயா. தமிழில் இவருக்கு மிக பெரிய படமாக அமைந்தது ஷங்கர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படம் தான். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து உச்ச நடிகை என்று பெயர் பெற்றார். இதையடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் ஸ்ரேயா.

 Actress shriya saran her husband kissing pics

கடந்த சில வருடங்களாக தமிழ் திரையுலகில் இவருக்கு பட வாய்ப்புக்கள் சரியாக அமையவில்லை. இதனால் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரேயா. தற்போது அடிக்கடி தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஸ்ரேயா.

 Actress shriya saran her husband kissing pics

அந்த வரிசையில் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா, தமிழ் சினிமாவில் இவர் நடித்து பல வருடங்கள் ஆகி விட்டது, கடைசியாக இவரது நடிப்பில் தமிழில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 Actress shriya saran her husband kissing pics

இனிமேல் தொடர்ந்து நடிப்பாரா, பட வாய்ப்புகள் அவருக்கு வருகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும் அடிக்கடி நியூ இயர் மற்றும் காதலர் தினம் போன்ற பல நாட்களில் இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தான் தற்போதும் இந்த புகைபடங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X