Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஸ்ரேயாவின் கணவருக்கு திடீர் அறுவை சிகிச்சை… அச்சச்சோ என்ன ஆச்சு… பதறிய ரசிகர்கள் !
ஹைதராபாத்: ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வுக்கு திடீரென அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தற்போது ஸ்ரேயாவின் கணவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி வெளியாகியதை அடுத்து ஸ்ரேயாவின் ரசிகர் அவரின் கணவரின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரேயா சரண்
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா . தொடர்ந்து ஜெயம்ரவியுடன் மழை, ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக சிவாஜி மற்றும் கந்தசாமி, அழகிய தமிழ்மகன், திருவிளையாடல் ஆரம்பம், தோரணை உள்பட ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் ஸ்ரேயா.

காதல் திருமணம்
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை
திருமணமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினார். தொடர்ந்து, தனது கணவருடன் இருக்கும் வீடியோ போட்டோவை பகிர்ந்து இணையத்தையே தெறிக்கவிட்டார். இதையடுத்து, திடீரென தனக்கு பெண்குழந்தை பிறந்து இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஒரு வருடமாக கர்ப்பமாக இருப்பதை மறைத்துவைத்திருந்து திடீரென குழந்தைபிறந்த செய்தியை வெளியிட்டார்.

திடீர் அறுவை சிகிச்சை
இந்நிலையில், ஸ்ரேயாவின் கணவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்த இந்த அறுவைச் சிகிச்சைக்கு நடந்துள்ளது. சிகிச்சைக்கு பின் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஸ்ரேயா, மருத்துவமனை டாக்டர்களுக்கும் நடிகர் ராம் சரணின் மனைவி உபசனாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

த்ரிஷ்யம் 2
2015 ஆம் ஆண்டு வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம் 2 இந்தி ரீமேக்கில் ஸ்ரேயா நடிக்கிறார். த்ரிஷ்யம் 2 படத்தில் அஜய் தேவ்கன், தபு மற்றும் இஷிதா தத்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அபிஷேக் பதக் இயக்குகிறார்.