வைரலாகும் லிப்லாக்.. பப்ளிக்கில் இப்படியா பண்ணுவீங்க ஸ்ரேயா?
நடிகை ஸ்ரேயா பொதுவெளியில் தனது கணவர் ஆண்ட்ரே கொஸ்சீவுக்கு கொடுத்த லிப்லாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
மும்பை: சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா.
துருவங்கள் பதினாறு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள நரகாசூரன் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்திற்காக மும்பை சென்றுள்ள நடிகை ஸ்ரேயா, தனது கணவர் ஆண்ட்ரே கொஸ்சீவுக்கு பொதுவெளியில் கொடுத்த லிப்லாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை ஸ்ரேயா, ரஷ்யாவை சேர்ந்த ரெஸ்டாரன்ட் ஓனரான ஆண்ட்ரே கொஸ்சீவ்வை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
பொதுவெளியில் கணவருடன் வருவதை பெருமளவில் தவிர்த்து வந்த நடிகை ஸ்ரேயா, கடந்த புதன்கிழமை இரவு மும்பையில் தம்பதி சகிதமாக வந்து மீடியாக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.
பாலிவுட் பிரபலம் ரமேஷ் தவுரானியின் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஸ்ரேயா, வெள்ளை நிற லெஹங்காவில் கணவருடன் போஸ் கொடுத்தார்.
சிறிது நேரம் புகைப்படக்கலைஞர்களுக்காக போஸ் கொடுத்த ஸ்ரேயா, அங்கிருந்து செல்லும் தருவாயில் தனது கணவர் அண்ட்ரே கொஸ்சீவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார்.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட அந்த லிப்லாக் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2001ம் ஆண்டில் தெலுங்கு சினிமாவான இஷ்டம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஸ்ரேயா, 37 வயதான போதும், இன்னமும் இளமையுடன் ஜொலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











