என்னா ஆட்டம்.. வெளிநாட்டுச் சாலையில் மழை நேரத்தில் அந்தப் பாடலுக்கு டான்ஸ் போட்ட பிரபல நடிகை!
சென்னை: 'மழை' பட பாடலுக்கு நடுரோட்டில் ஆடி, பிரபல நடிகை வெளியிட்டுள்ள வீடியோவை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.
Recommended Video
நடிகை ஸ்ரேயா, தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

காதல் திருமணம்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த, ஸ்ரேயா, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்து 152 ஆக உயர்வடைந்து உள்ளது. 2,206 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

பார்சிலோனா
லாக்டவுன் காரணமாக, சினிமா, டிவி தொடர் படப்பிடிப்புகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் நடிகை ஸ்ரேயா, தனது கணவருடன் பார்சிலோனாவில் இருக்கிறார். அங்கிருந்து அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

நடுரோட்டில் ஆட்டம்
நடனம் மீது அதிக ஆர்வம் கொண்ட ஸ்ரேயா, தான் ஆடும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் பார்சிலோனாவில், நடுரோட்டில் தனது கணவருடன் ஜாலியாக நடனம் ஆடும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ஒரு வீடியோவில் நாட்டுப்புறப் பாடலுக்கும் மற்றொரு வீடியோவில், தான் நடித்த 'மழை'படத்தில் இடம்பெறும், 'நீ வரும்போது நான் மறைவேனா? என்ற பாடலுக்கும் நடனம் ஆடியுள்ளார்.

பிடித்த பாடல்
இது தொடர்பான கேப்ஷனில், இந்த இனிமையான பாடலுக்கு நடனம் அமைத்த பிருந்தா கோபாலுக்கு நன்றி. எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா. பலர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். ஏராளமான தமிழ் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதெல்லாம் சரி, மாஸ்க் எங்கே? என்று சிலர் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











