ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இந்த ஹீரோயினும் இருக்கிறார்... நடிகர் அஜய்தேவ்கனுக்கு ஜோடியாமே?

By

ஐதராபாத்: ஆர்ஆர்ஆர் படத்தில், இந்தி நடிகர் அஜய்தேவ்கன் ஜோடியாக பிரபல ஹீரோயின் நடிக்கிறார்.

ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். இதில் தெலுங்கு ஹீரோக்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் இணைந்து நடிக்கின்றனர்.

பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, இந்தி நடிகை ஆலியா பட் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

ரேய் ஸ்டீவன்சன்

ரேய் ஸ்டீவன்சன்

ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரிஸ், தோர், கிங் ஆர்தர் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஜேம்ஸ்பாண்ட் படமான எ வியூ டு கில், இண்டியானா ஜோன்ஸ், த லாஸ்ட் குருசேட் உட்பட பல படங்களில் நடித்துள்ள ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு

பாதுகாப்பு அதிகரிப்பு

பலத்த பாதுகாப்புடன் இதன் ஷூட்டிங் நடந்துவருகிறது. இருந்தும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் காட்சியை ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது வைரலானது. இதையடுத்து படத்தின் எடிட்டிங் ரூமுக்கு அவர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

ஆலியா பட்

ஆலியா பட்

இந்நிலையில், இந்தி சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஆலியா பட், ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக, இதில் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்தார். ஆனால், டாப் நடிகையான அவரை, சும்மா வந்துவிட்டு போவது போல காட்ட மனமில்லாத ராஜமவுலி அவருக்காக ஒரு பாடலை படத்தில் இணைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா

இதற்கிடையே இந்தப் படத்தில் அஜய்தேவ்கன் ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடிக்க இருக்கிறார். ஸ்ரேயாவும் அஜய்தேவ்கனும் ஏற்கனவே த்ரிஷயம் படத்தின் இந்தி ரீமேக்கில் சேர்ந்து நடித்திருந்தனர். அந்தப் படம் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X