அசுரன் ரீமேக்... அனுஷ்கா மறுத்த பச்சையம்மாள் கேரக்டர்... இப்ப இந்த ஹீரோயின் நடிக்கிறாராமே?

By

ஐதராபாத்: அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியர் கேரக்டரில் பிரபல நடிகை நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ் ராஜ், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்துள்ள படம், அசுரன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார்.

அனுஷ்கா

அனுஷ்கா

ஶ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இந்தப் படத்தில் மஞ்சுவாரியர் நடித்த கேரக்டருக்கு அனுஷ்காவை கேட்டனர். அவர் கால்ஷீட் பிரச்னை காரணமாக மறுத்துவிட்டதால், வேறு நடிகையை தேடி வந்தனர்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

யாரும் செட்டாகாததால் இப்போது நடிகை ஸ்ரேயாவிடம் பேசியுள்ளார். அவர் பச்சையம்மாள் கேரக்டரில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இன்னும் உறுதிப் படுத்தவில்லை.

பல படங்களில்

பல படங்களில்

ஸ்ரேயா தமிழில் மழை, திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர்.

திருமணம்

திருமணம்

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X