Don't Miss!
- News
"அதிமுகவின் தற்போதைய நிலைக்கு டெல்லி தான் காரணம்" டிடிவி தினகரன் ஓபன் டாக்!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
க்ராக் பட இயக்குநருடன் கைகோர்த்த பாலகிருஷ்ணா.... ஜோடியாக பிரபல நடிகை ஒப்பந்தம்!
ஐதராபாத் : டோலிவுட்டின் முன்னணி ஹீரோவான பாலகிருஷ்ணா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் அகண்டா படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இவரது அடுத்த படத்தினை இயக்கவுள்ளார் க்ராக் பட இயக்குநர் கோபிசந்த் மாலினேனி.
இயக்குநர்
கெளதம்
வாசுதேவ்
மேனன்
போஸ்டர்
...என்ன
தான்
பிரச்சனை
?
என்ன
முடிவு
?

நடிகர் பாலகிருஷ்ணா
டோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் பாலகிருஷ்ணா. போயபதி சீனு இயக்கத்தில் அகண்டா படத்தில் பாலகிருஷ்ணா நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அகண்டா படம்
படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் பாலகிருஷ்ணா.

க்ராக் பட இயக்குநருடன் கூட்டணி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் அடுத்ததாக அவர் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை க்ராக் படத்தின் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார். க்ராக் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இந்தப் படத்தின் முதல்கட்ட பணிகள் துவங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாயகியாக ஸ்ருதி ஹாசன்
இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், நேற்றைய தினம் தீபாவளியையொட்டி படத்தின் நாயகி குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் நாயகியாக தற்போது ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.

முந்தைய படத்தின் நாயகி
இயக்குநர் கோபிசந்த் மாலினேனியின் முந்தைய வெற்றிப்படமான க்ராக்கில் ஹீரோயினராக நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றவர் ஸ்ருதிஹாசன். இந்நிலையில் அவர் தற்போது இயக்கவுள்ள பாலகிருஷ்ணா படத்தின் நாயகியாகவும் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமன் இசை
படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இவரது இசையமைப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் பல ஹிட் பாடல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ள நிலையில் இந்தப் படத்திற்கு இவர் இசையமைக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கமர்ஷியல் ஹிட்களை கொடுத்துவரும் பாலகிருஷ்ணாவிற்கு இந்தாப் படமும் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.