GOAT படத்தில் வாரிசு நடிகை?.. அட இது செமயா இருக்கே.. புதுசு புதுசா சொல்றாங்களே
சென்னை: தமிழ் சினிமாவின் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இப்போது GOAT படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருக்கிறார். எனவே படங்களில் நடிப்பதை தவிர்க்கவிருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி கோட் படம் வெளியாகவிருக்கும் சூழலில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.
சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு சரோஜா, கோவா என வரிசையாக படங்கள் இயக்கி கவனிக்கப்பட்டார். அதற்கு பிறகு வெங்கட் பிரபுவின் கரியரிலேயே அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50ஆவது படமாக உருவான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தில் அவர் வைத்திருந்த ட்விஸ்ட் அதிரிபுதிரி வரவேற்பை பெற்றது. மங்காத்தா வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் என்ற வரிசையில் இடம்பெற்றுவிட்டார். மேலும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான லீடோடு படத்தை முடித்திருந்தார் அவர்.

GOAT:மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. அந்த சறுக்கலை மாநாடு படத்தின் மூலம் சரி செய்துகொண்ட அவர் கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். தற்போது விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இதில் மெகா ஹிட்டை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செப்டம்பர் 5ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.
ரீ என்ட்ரி டாப் ஸ்டார்: இந்தப் படத்தில் மற்றொரு ஹைலைட்டாக இருப்பது டாப் ஸ்டார் பிரசாந்த். 90களில் விஜய், அஜித்தை விடவும் பாப்புலரில் இருந்த பிரசாந்த் சில காரணங்களால் சினிமாவிலிருந்து காணாமல் போனார். அதற்கு பிறகு இப்போது கோட் படத்தில் நடித்திருக்கிறார். முதன்முறையாக விஜய்யுடன் பிரசாந்த் நடிப்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் சிங்கிளில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து அட்டகாசமாக நடனம் ஆடவும் செய்திருந்தார் அவர்.
கலவையான விமர்சனம்: படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த இரண்டு பாடல்களையுமே விஜய் பாடியிருக்கிறார். மேலும் இரண்டாவதாக வெளியான சின்ன சின்ன கண்கள் பாடலில் AI மூலம் பவதாரிணியின் குரலை கொண்டுவந்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசை என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இரண்டு பாடல்களுக்குமே படக்குழு எதிர்பார்த்த மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.
புதிய தகவல்: இந்நிலையில் விரைவில் படத்திலிருந்து மூன்றாவது சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது அந்தப் பாடல் பற்றிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. அதன்படி அந்தப் பாடலை நடிகையும், பாடகியும் கமல் ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் பாடியிருப்பதாக சொல்லப்படுகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் விஜய் படத்துக்காக ஸ்ருதி முதன்முதலில் பாடியிருக்கிறார் என்ற பெயரை பெறுவார்.


Click it and Unblock the Notifications











