த்ரோபேக் ஃபோட்டோ வெளியிட்டு கமலுக்கு வாழ்த்து சொன்ன மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா
சென்னை : நடிகர் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். கமலுடன் தாங்கள் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு பல ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு, அவை ட்விட்டரில் டிரெண்ட் ஆக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வாழ்த்து பதிவிடுவதால் சோஷியல் மீடியா முழவதும் கமலை பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் கமலின் மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் வித்தியாசமான முறையில் தங்களின் அப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தங்களின் சிறுவயதில் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட பிளாக் அண்ட் ஒயிட், பழைய ஃபோட்டோக்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அப்பா கமலுடன் இருக்கும் ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்ருதிஹாசன், ஹேப்பி பர்த்டே கமலஹாசன். இந்த ஆண்டும், இன்னும் பல ஆண்டுகள் உங்களின் அடையாளமான உற்சாகம், மேஜிக், கலைத்திறன், நிறைய அன்பு ஆகியவற்றால் நிரம்பி இருக்க வாழ்த்துக்கள். உங்களுக்குள் தேக்கி வைத்திருக்கும் அற்புதமான விஷயங்களை பார்க்க இனியும் நாங்கள் காத்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அக்ஷரா ஹாசன் இன்ஸ்டாகிராமில், அவ்வை ஷண்முகி கெட்அப்பில் அப்பா கமல் மற்றும் அக்கா ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ, அப்பா கமலின் பழைய ஃபோட்டோ மற்றும் அப்பாவுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்டது என 3 ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதோடு, எனது அன்பான அப்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து. வாழ்க்கை மற்றும் வேலையின் பலவிதமான பக்கங்களை உங்களிடம் இருந்து தான் நான் கற்றுக் கொண்டேன். உங்களின் கனவுகளை அடைய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் நான் எதை செய்ய வேண்டும் என நான் தேர்வு செய்ய எனது இன்ஸ்பிரேஷன். ஹேப்பி பர்த்டே மை ராக்ஸ்டார் அப்பாஜி என குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் இருவரின் போஸ்ட்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஸ்ருதியின் பதிவுகள் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் கமலுக்கு வாழ்த்து பதிவிட்டுள்ளனர். விக்ரம் படத்தை பார்க்க ஆவலாக காத்திருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











