தலைவிரி கோலமாய் நடிகை ஸ்ருதிஹாசன்... நான் இப்போதான் முழு கிளாமரா மாறி இருக்கேன்!
சென்னை : கேஜிஃஎப் இயக்குனரின் அடுத்த படைப்பில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
கிராக், பிட்ட கதாலும், வக்கீல் சாப் என தெலுங்கில் இவர் நடித்த அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.
இதுவரை பல விதமான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டிருந்த ஸ்ருதிஹாசன் இப்பொழுது தலைவிரி கோலமாய் பார்க்கவே அலங்கோலமாய் உள்ள புகைப்படங்களை பதிவிட்டு இப்போதான் முழு கிளாமரா மாறியிருக்கிறேன் என கூறியுள்ளார்.

தென்னிந்தியாவில் முன்னணி
2009ஆம் ஆண்டு வெளியான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ஸ்ருதிஹாசன் பல பாடல்களைப் பாடி பாடகியாகவும் உள்ளவர். தமிழில் ஏழாம் அறிவு மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இவர் இப்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.

மகிழ்ச்சியில் உள்ளார்
குறிப்பாக தெலுங்கில் இவருக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கின்ற காரணத்தினால் டோலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசனுக்கு கிராக்,வக்கீல் சாப்,பிட்டகதாலு என சென்ற ஆண்டு வெளியான அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.

பிரபாஸ் ஜோடியாக
கேஜிஎஃப் என்ற பிரமாண்ட படத்தை கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல் இப்பொழுது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது.இதில் பிரபாஸ் ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ஆந்திராவில் உள்ள காட்டுப் பகுதியில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கிளாமராக மாறியுள்ளேன்
தமிழில் தற்போதைக்கு லாபம் மட்டும் ரிலீசாக வெயிட்டிங்கில் இருக்க அடுத்து அப்படத்தைப் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் இப்போதைக்கு வெளியாகவில்லை. இந்த நிலையில் இதுவரை பலவிதமான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திண்டாட வைத்த ஸ்ருதிஹாசன் இப்பொழுது தலைவிரி கோலமாய் உள்ள சில புகைப்படங்களை பதிவிட்டு இப்பொழுதுதான் நான் முழு கிளாமராக மாறியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











