'ஷட் அப் யுவர் மவுத்...' - ஸ்ருதி ஹாஸனின் அரேபியன் ஸ்டைல் பாட்டு
சென்னை: டி இமான் இசையில் ஒரு படத்துக்கு பின்னணி பாடியுள்ளார் ஸ்ருதி ஹாஸன். ஷட் அப் யுவர் மவுத்... என்று தொடங்கும் இந்தப் பாடல் அரேபிய பாணி பாடலாகும்.
வி.செங்கையா வழங்கும் ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் வேகமாக வளர்ந்து வருகிறது, என்னமோ ஏதோ.
வேகமாக வளர்ந்து வரும் இந்தப் படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அலா மொதலைன் தி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

கவுதம் கார்த்தி
கடல் படத்துக்குப் பிறகு கவுதம் கார்த்தி நடிக்கும் புதிய படங்களில் இந்த என்னமோ ஏதோ -வும் ஒன்று. ராகுல் பிரீத்சிங், நிகிஷா பட்டேல் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அனிருத்
காதலுக்கு முக்கியத்துவம் நிறைந்த இந்த கதைக்கு டி.இமான் இசை அமைக்கிறார். இவர் இசையில் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளார்.

ஸ்ருதி ஹாஸன்
இப்பொழுது "ஷட் அப் யுவர் மவுத்" என்ற பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். 'மிடில் ஈஸ்டர்ன்' எனப்படும் அரேபியன் ஸ்டைலில் அமைந்த பாடல் இது. இந்த வகைப் பாடலை தமிழில் தானே முதன்முதலாகப் பாடியுள்ளதாக ஸ்ருதி பெருமைப்பட்டார். இந்தப் பாடலை மதன் கார்கி எழுதியுள்ளார். ஸ்ருதியுடன் தீபன் சேர்ந்து பாடினார்.

ரவி தியாகராஜன்
பிரியதர்ஷன் உதவியாளர் ரவி தியாகராஜன் இந்தப் படத்தை இயக்குகிறார். பி.ரவிக்குமார், பி.வி.பிரசாத் தயாரிக்கிறார்கள். படத்தின் இரண்டு பாடல்கள் தாய்லாந்தில் அடுத்த மாதம் படமாக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











