’என்னால் இது முடியாதுப்பா..!’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..!
மைக்கேல் கோர்சலின் பிரேக்கப் டிவீட்டை நடிகை ஸ்ருதி ஹாசன் கண்டுகொள்ளவே இல்லை.
சென்னை: காதலர் மைக்கேல் கோர்சலுடனான காதல் முறிந்து விட்டதாக நிலையில், நடிகை ஸ்ருதி தனது டிவிட்டர் பக்கத்தில் கங்காரு பற்றிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகர் கமலின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசனும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு கமல் மற்றும் சரிகா ஓகே சொல்லி விட்டதாகக் கூறப்பட்டது.
இருவரும் தொடர்ந்து ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தனர். இதனால் விரைவில் அவர்களது திருமண அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பாராத திருப்பம்
ஆனால், யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பமாக தங்களுடைய காதல் முறிந்து விட்டதாக மைக்கேல் கோர்சல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர், "வாழ்க்கை உலகின் எதிரெதிர் பக்கங்களில் இருந்து துரதிஷ்டவசமாக நம்மை காப்பாற்றுகின்றது. எனவே நாம் தனியாக இருப்பது போல நடக்க வேண்டும். இனி எப்போது அவர் ஒரு நண்பராக இருப்பார் என நினைக்கின்றேன்" எனத் தெரிவித்திருந்தார்.

கண்டுகொள்ளாத ஸ்ருதி
மைக்கேலின் இந்தப் பதிவால் ஸ்ருதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்ருதி இது தொடர்பாக ஏதேனும் விளக்கம் அளிப்பார் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இதனை கண்டு கொள்ளாத ஸ்ருதி, வழக்கம் போல் தனது டிவிட்டர் பக்கத்தில் பொதுவான விசயங்கள் பற்றி பதிவிட்டு வருகிறார்.
அம்மாவும் அக்காவும்...
அதில் ஒரு பதிவில் அவர், ‘படப்பிடிப்பின் போது என்னை ராஜபாளையம் அமில் ஹோட்டல் உரிமையாளர்களான விஜயலட்சுமி அக்கா மற்றும் பூபதி அம்மா ஆகியோர் நன்றாக கவனித்துக் கொண்டனர். அவர்களின் அக்கறை மற்றும் பாசத்தினால் நான் மிகவும் சௌகரியமாக உணர்ந்தேன். அவர்களுக்கு மிக்க நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.
கங்காரு குட்டி
இதேபோல் மற்றொரு பதிவில் கங்காரு குட்டியின் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கங்காரு குட்டி செய்யும் சேட்டைகளைப் பார்த்து அவர், ‘என்னால் இது போல் பண்ண முடியாது' எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











