கைவசம் புதிய படங்கள் இல்லை.. வாரிசு நடிகை எடுத்த அடுத்த அதிரடி முடிவு!

நடிகை ஸ்ருதி ஹாசன் இசைத்துறையில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

சென்னை: ஆங்கிலத்தில் ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

கமலின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த போதும், தொடர்ந்து அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் பட வாய்ப்புகள் அமையவில்லை.

Shruthis new decision

இதனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், அதிரடியாக அப்பா வழியில் சின்னத்திரையில் தொகுப்பாளர் ஆனார் ஸ்ருதி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் வாராவாரம் பிரபலங்கள் பலரை அவர் பேட்டி எடுத்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்த வருடம் ஆங்கிலத்தில் ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிட திட்டமிட்டுள்ளார் ஸ்ருதி. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.

நடிப்பைத் தாண்டி பாடுவதிலும், இசை அமைப்பதிலும் வல்லவர் ஸ்ருதி. கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு அவர் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X