‘கல்கி’ ஸ்ருதியின் 2 வது திருமணத்திலும் சிக்கல்… விவாகரத்து செய்ய முடிவு

By Mayura Akilan

முதல் திருமணம் முறிந்து போன நிலையில் இரண்டாவது திருமணம் செய்த ஸ்ருதியின் வாழ்வில் சூறாவளி சுழன்றடிக்கிறது. இதனால் இரண்டாவதாக திருமணம் செய்தவரையும் விவாகரத்து செய்து விடலாமா என்று யோசித்து வருகிறார் 'கல்கி' ஸ்ருதி

கன்னட நடிகையான ஸ்ருதி தமிழில் 'கல்கி' படத்தில் பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்டார். இவர் கன்னட நடிகரும், இயக்குனருமான மகேந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. 13 ஆண்டு மணவாழ்க்கை 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 2011ம் ஆண்டு ஸ்ருதிக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது.

கார்த்திகைப் பெண்கள்

கார்த்திகைப் பெண்கள்

திருமணத்திற்குப் பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கி ஸ்ருதி விவாகரத்திற்குப் பின்னர் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் கார்த்திகைப் பெண்கள் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

கடந்த ஜூன் 6ம் தேதி ஸ்ருதி, டைரக்டரும், பத்திரிகையாளருமான சந்திரசூட்டை கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் திடீரென 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திலும் தற்போது திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சந்திரசூட் மனைவி மஞ்சுளா, தனது கணவரை ஸ்ருதி சட்டவிரோதமாக மணந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுவே புகைச்சலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

ஏமாற்றப்பட்டாரா ஸ்ருதி

ஏமாற்றப்பட்டாரா ஸ்ருதி

சந்திரசூட்டுக்கும், மஞ்சுளாவிற்கும் 14 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து விட்டனர். ஆனால் சட்டப்படி விவகாரத்து பெறவில்லை இதனால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக நினைக்கிறார் ஸ்ருதி.

சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

தனது கணவர் விவகாரத்துக்கு என்னை வற்புறுத்தி வந்தார். எனக்கு அதில் விருப்பமில்லை. எனக்கும், மகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். எனவே ஸ்ருதியை விட்டுவிட்டு என் கணவர் என்னுடன் வரவேண்டும். இதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளது ஸ்ருதிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கர்நாடகா பெண்கள் அமைப்பு

கர்நாடகா பெண்கள் அமைப்பு

ஸ்ருதி, கர்நாடகா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் சந்திரசூடு 2 வது திருமண விவகாரம் அங்கு புயலை கிளப்பியுள்ளது.

மஞ்சுளாவிற்கு உரிமை உண்டு

மஞ்சுளாவிற்கு உரிமை உண்டு

இது பற்றி பிரபல சேனல் ஒன்றில் கருத்து கூறிய ஸ்ருதி, பெண் என்ற முறையில் மஞ்சுளாவின் நிலையை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார்.

சந்திரசூட் மறுப்பு

சந்திரசூட் மறுப்பு

ஆனால் சந்திரசூட் இதனை மறுத்தார். மஞ்சுளாவை விவாகரத்து செய்து விட்டேன். இருவரும் சம்மதத்தோடுதான் பிரிந்தோம். எனக்கு திருமணமானதும் குழந்தை இருப்பதும் ஸ்ருதிக்கும் தெரியும் என்று கூறியுள்ளார். இதில் சமாதானமடையாத ஸ்ருதி பேசாமல் விவாகாரத்து செய்து விடலாமா என்று யோசித்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X