»   »  அப்பாவுக்கே கால்ஷீட் இல்லை... ஸ்ருதி ஹாசன் நிலை பாவம்தானே!

அப்பாவுக்கே கால்ஷீட் இல்லை... ஸ்ருதி ஹாசன் நிலை பாவம்தானே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த சபாஷ் நாயுடு படத்தை எந்த நேரத்தில் தொடங்கினாரோ கமலுக்கு பிரச்னை மேல் பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது. பாதியில் நின்ற சபாஷ் நாயுடு படப்பிடிப்பைத் தொடரவும் முடியாமல் தவித்து வருகிறார்.

எதிர்பாராத விபத்தால் கால் முறிந்து ஓய்வில் இருந்த கமல்ஹாசன் இப்போது தேறி விட்டார். மீண்டும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை தொடங்கவும் ஆர்வமாக இருக்கிறாராம்.

Shruthi unable to give call sheet to Kamal Hassan

ஆனால் படத்தில் கமலின் மகளாகவே நடிக்கும் ஸ்ருதிஹாசனின் கால்ஷீட்தான் சொதப்புகிறதாம். சங்கமித்ரா படத்திற்காக மொத்தமாக தேதிகளைக் கொடுத்து விட்டாராம் ஸ்ருதி.

இப்போது ஒரு ஹிந்தி படத்திலும் பிசியாக இருக்கிறார். அப்பாவையே காக்க வைக்கும் நிலைக்கு ஆளாகி விட்டோமே என்ற வருத்தமாம் ஸ்ருதிஹாசனுக்கு...!

English summary
Actress Shruthi is regretting for her tight schedule caused for the delay of Kamal's Sabash Nayudu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil