கமல் சார், ஸ்ருதி சாப்பிடாம இருக்காங்க, என்னன்னு கேளுங்க... வைரல் போட்டோ... நெகிழ்ச்சி ஸ்ருதி
சென்னை: தனது போட்டோவை கண்டு ரசிகர்கள் அடித்த கிண்டலுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
நடிகை ஸ்ருதிஹாசன் இப்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம், தெலுங்கில் ரவிதேஜாவுடன் கிராக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வேறு படங்கள் இல்லை.
இந்நிலையில் அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய ஸ்டில்களை பதிவிட்டுள்ளார்.

வழக்கமான அழகு
கருப்பு வெள்ளையில் வெளியிடப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் அவர் ஆளே மாறியிருக்கிறார். மிகவும் ஒல்லியாக இருக்கிறார். முகம் சோகமாக இருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், உடனடியாக சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்கும்படி கூறியுள்ளனர். வழக்கமான உங்கள் அழகை காணவில்லை. இது யாரோ போல் இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

பரிதாபமாக இருக்கிறது
அநியாயத்துக்கு இப்படி ஒல்லியாயிட்டீங்களே என்றும் அதிகமாகவே இளைத்துவிட்டீர்கள், இது உங்கள் அழகை கெடுத்துவிட்டது என்று கூறினர். மேலும் சில ரசிகர்கள், உங்கள் முகத்தில் அருளே இல்லை... நோயாளி போல ஆகிவிட்டீர்கள், இப்படிப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. உடனடியாக உடலை பேலன்ஸ் பண்ணுங்க என்று தெரிவித்துள்ளனர்.

சாப்பிடாம இருக்காங்க
இன்னும் சில கலாய் ரசிகர்கள், 'கமல் சார், ஸ்ருதி மேடம் சாப்பிடாம இருக்காங்க, என்னன்னு கேளுங்க' என்றும், நீங்க ஏற்கனவே ஒல்லியாதான இருந்தீங்க... திரும்பவும் ஏன் ஒல்லியானீங்க? என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர் அவரது போட்டோவை பாராட்டியுள்ளனர். 'அதே கண்கள், ஐயா கமல்ஹாசனின் கொடை இது. மெலிந்தாலும் மேனி அழகு. முகமும் பொலிவு என்று கூறியுள்ளனர்.
மூன்று நாள் இடைவெளி
இதையடுத்து மற்றொரு போட்டோவை பதிவிட்ட ஸ்ருதி, ரசிகர்களின் ட்ரோல்களுக்குப் பதிலளித்துள்ளார். அதில், என்னை பற்றி மற்றவர்கள் என்ன் சொல்கிறார்கள் என்பதை பற்றி கவனத்தில் கொள்பவள் அல்ல. இருந்தாலும் இதை சொல்கிறேன். குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்பதை தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு புகைப்படங்களும் மூன்று நாட்கள் இடைவெளியில் எடுத்தது.
பிளாஸ்டிக் சர்ஜரி
நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் என் ஹார்மோன்களின் கருணையுடன் நன்றாகவே இருக்கிறேன். உடல் மாற்றங்கள் எளிதானதல்ல. புகழ்பெற்றவராக இருந்தாலும் இல்லை என்றாலும் மற்றவர் பற்றித் தீர்ப்பளிப்பது சரியல்ல. இது என் முகம், என் வாழ்க்கை என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆமாம். நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அதைச் சொல்ல எனக்கு வெட்கமில்லை.

மிகப்பெரிய காதல் கதை
மனதின் இயக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். அன்பை பரப்புங்கள். ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்க கற்றுக்கொண்டு வருகிறேன். காரணம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய காதல் கதை என்னிடம் இருக்கிறது. இது உங்களுக்குமானதுதான்' என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் சில மாதங்களுக்கு முன் தனது மூக்கில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக செய்திகள் வெளியான நிலையில், இப்போது அதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











