கொரோனாவிலிருந்து மீள தடுப்பூசி போடுவதே சிறந்தது… ஸ்ருதிஹாசன் அட்வைஸ் !
சென்னை : கொரோனாவிலிருந்து நாடு மீள அனைவரும் தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
ஊரடங்கால் வீட்டில் முடங்கி இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளார்.
நாம் உலகத்தின் மீது இரக்கமும் புரிந்துணர்வும் கொண்டிருக்க வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார்.

அறிமுகம்
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் கொடி கட்டி பறந்து வருகிறார் ஸ்ருதி.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர், சமீபத்தில் கூட சர்ச்சைக்குரிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து இருந்தார்.

சலார் படத்தில்
தமிழ், தெலுங்கு, இந்தி என படு பிஸியாக நடித்து வரும் இவர், விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இரக்கம்
ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் உலகின் பிற பகுதிகளை முக்கியமாக இழக்கிறேன். இனி ஒரு போதும் பயணத்தை ஆரோக்கியமாகவோ அல்லது புதிய அனுபவமாகவோ எடுத்துக் கொள்ள மாட்டேன், நாம் உலகத்தின் மீது இரக்கமும் புரிந்துணர்வும் கொண்டிருக்க வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.

உதவும் நேரம் இது
மேலும், அனைவரும், இச்சூழ்நிலையில் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கிறோம். முதலில் நாம் அனைவரும் விரைவில் தடுப்பூசி போடுவோம், மக்கள் அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கு உதவும் நேரம் இது. போர் காலத்தில் செயல்படுவதைப்போல செயல்பட வேண்டும். விரைவில் இது சரியாகலாம். பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











