அப்பாவுடன் க்யூட் செல்ஃபி.. வைரலாகும் கமல், ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள்.. அந்த விஷயத்தை சொல்லியாச்சா?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் உடன் அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சினிமாவுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்த ஸ்ருதிஹாசன் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பாவுடன் எடுத்த க்யூட்டான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

இருவரும் செம பிசி

இருவரும் செம பிசி

பிக் பாஸ் முடிந்த நிலையில், விக்ரம் ஷூட்டிங், அரசியல் என உலக நாயகன் கமல்ஹாசன் ரொம்பவே பிசியாக உள்ளார். அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசன் மியூசிக் ஆல்பம், ஆந்தாலஜி, கோலிவுட் மற்றும் டோலிவுட் பட ஷூட்டிங் என படு பிசியாக உள்ளார். இந்நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் ஷேர் செய்துள்ளார்.

கில்லிங் லுக்

கில்லிங் லுக்

ஸ்ருதிஹாசன் கண்ணாடிக்கு முன் நின்று கொண்டு தனது தந்தையுடன் எடுத்த க்யூட்டான செல்ஃபி புகைப்படம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த போட்டோவில், கமல்ஹாசனின் கில்லிங் லுக் வேற லெவல். பல லட்சம் லைக்குகளும் ப்ளூ டிக் பிரபலங்களின் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

டேடி டியரஸ்ட்

டேடி டியரஸ்ட்

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் Daddy dearest (அப்பா செல்லம்) என்கிற கேப்ஷனுடன் இந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். தமன்னா, பிக் பாஸ் சோமசேகர், உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த போட்டோக்களுக்கு ஹார்ட்டீன் போட்டுள்ளனர்.

பாபநாசம் 2 வருமா

பாபநாசம் 2 வருமா

மோகன் லாலின் திரிஷ்யம் 2 மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் கமலையும் ஸ்ருதியையும் ஒன்றாக பார்த்த இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் பாபநாசம் 2 வருமான்னு அப்பா கிட்ட கேட்டு சொல்லுங்க ஸ்ருதி என ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

காதலை சொல்லியாச்சா

காதலை சொல்லியாச்சா

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது காதலர் சாந்தானு ஹசாரிகாவின் நெருக்கமான போட்டோக்கள் வைரலான நிலையில், சில நெட்டிசன்கள், புது காதல் விஷயத்தை அப்பா கிட்ட சொல்லியாச்சா என்றும் கேட்டு கமெண்ட் செய்துள்ளனர். விஜய்சேதுபதியுடன் ஸ்ருதி நடித்துள்ள லாபம் விரைவில் திரைக்கு வருகிறது. பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X