ஸ்ருதிஹாசன் உடன் பார்ட்டி, பப் என சுற்றும் லோகேஷ் கனகராஜ்.. லீக்கான வீடியோ.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான 'இனிமேல்' எனும் வீடியோ ஆல்பத்தின் டைட்டிலிலேயே ஸ்ருதிஹாசன் ஏதாவது சூட்சமம் வைத்திருக்கிறாரா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இனிமேல் பாடல் வீடியோ வெளியான பின்னரும் லோகேஷ் கனகராஜ் உடன் ஸ்ருதிஹாசன் சேர்ந்து பார்ட்டி மற்றும் பப் என சுற்றி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஸ்ருதிஹாசன் சமீப காலமாக தனது 2வது பாய் ஃபிரெண்டான சாந்தனு ஹசாரிகாவுடன் சுற்றாமல் லோகேஷ் கனகராஜ் உடன் சுற்றுவது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் இந்தியில் அறிமுகமானார். அதன் பின்னர் 7ஆம் அறிவு படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். தற்போது தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக மாறியுள்ளார். பிரபாஸ் உடன் அவர் நடித்த சலார் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்படமாக மாறியது.
அதிவேக வளர்ச்சி: மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கார்த்தியுடன் இணைந்து கைதி விஜய்யுடன் மாஸ்டர், கமல்ஹாசன் உடன் விக்ரம், மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ என தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து அடுத்து தலைவர் 171 படத்தை இயக்கப் போகிறார்.
லோகேஷ் கனகராஜ் குடும்பம்: கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி லோகேஷ் கனகராஜ் ஐஸ்வர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். லோகேஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு ஆத்விகா மற்றும் ஆருத்ரா என இரு குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் நுழைந்ததில் இருந்தே சொந்த வாழ்க்கை தனி, சினிமா வாழ்க்கை தனி என்று வாழ்ந்து வருகிறார். மேலும், சமீபத்தில், ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து நடித்தது குறித்து உங்க மனைவி என்ன சொன்னாங்க என எழுப்பப்பட்ட கேள்விக்கு உடனடியாக டென்ஷன் ஆன லோகேஷ் பர்சனல் லைஃப் பத்தி கேட்காதீங்க அதற்கு பதில் சொல்ல மாட்டேன் என மறுத்து விட்டார்.
ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ்: லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பெரிய 'நோ' சொல்லி வரும் நிலையில், ஸ்ருதிஹாசனை கட்டிப் புரண்டு சோபாவில் அவர் மீது ஏறி உருளும் காட்சிகள் என ஓவர் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இனிமேல் பாடல் வெளியான நிலையில், டீசரில் மட்டும் தான் கசமுசா சீன்களை காட்டி ஏமாற்றிவிட்டனர். பாடலில் லோகேஷ் நல்ல நடிகர் என்பது தெரிகிறது என ரசிகர்கள் பாராட்டினர்.
சேப்பாக்கத்தில் ஜோடியாக: ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து பார்த்தது ரசிகர்களை ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பினாலும் அது வெறும் புரமோஷனுக்கான ஸ்டன்ட் என நினைத்துக் கொண்டனர்.
ஸ்ருதிஹாசனுடன் பார்ட்டி: இந்நிலையில், திடீரென சென்னையில் உள்ள பிரபல பப் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் உடன் ஸ்ருதிஹாசன் பார்ட்டி பண்ண வீடியோவை வெளியிட்ட நெட்டிசன்கள் இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கி விட்டனரா? என்றும் கேள்விகள் பறக்கின்றன. ஆனால், இனிமேல் பாடலின் சக்சஸ் பார்ட்டி மட்டும்தான் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











