ஒரே ஒரு சின்ன டீசர்.. லோகேஷ் கனகராஜை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்.. எல்லாத்துக்கும் காரணம் கமல்?
சென்னை: லியோ படத்தை முடித்து விட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்துக்கான கதையை ரெடி பண்ணுவார் என பார்த்தால் கமல்ஹாசன் மகளுடன் பாடலில் கசமுசாவாக நடித்திருக்கிறாரே என ஏகப்பட்ட ட்ரோல்களையும் மீம்களையும் போட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
விஜய் அப்பா சொல்லியும் கேட்காமல் லியோ படத்தின் பிளாஷ்பேக் போர்ஷனை கரெக்ட் செய்யாமல் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு ஏகப்பட்ட விமர்சனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டார்.

அடுத்து தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில், அதற்கு இடையே ஸ்ருதிஹாசன் உடன் ஜோடி போட்டு டூயட்டாக நடித்துள்ளதை பார்த்து பலரும் ஷாக் ஆகி விட்டனர்.
இனிமேல் டீசர்: கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் திருமணமான ஜோடிகளாக நடித்துள்ள இனிமேல் வீடியோ ஆல்பத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. இதுவரை ரொமான்டிக் என்றால் என்னவென்றே தெரியாமல் துப்பாக்கியும் கத்தியும் பிடித்து ஹீரோயின்களின் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தவருக்கு ஸ்ருதிஹாசன் ரொமான்ஸ் எப்படி செய்வது என பாடமே எடுத்தது போல அந்த இனிமேல் டீசர் அமைந்துள்ளது. அதன் மெயின் பிக்சர் வரும் மே 25ம் தேதி வெளியாக உள்ளது.

2024ல் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்: நடிகர் விஜய் அரசியல்வாதியாகி விட்டார். தோனி சிஎஸ்கே கேப்டன்சியை உதறித்தள்ளி ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக்கி விட்டார். இளையராஜா பயோபிக்கில் தனுஷ், லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் உடன் இப்படி ரொமான்ஸ் செய்கிறாரே இன்னும் என்னவெல்லாம் சர்ப்ரைஸை இந்த 2024 கொடுக்கப் போகிறதோ என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
காப்பு கிழிச்சிடப்போகுது: ஸ்ருதிஹாசன் செல்லத்தை லோகேஷ் கனகராஜ் என்ன பண்றாரு பாருங்க என்பது போல கில்லி முத்துப்பாண்டி போட்டோவை எல்லாம் போட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் கையில இருக்க காப்பு ஸ்ருதி டிரெஸ்ஸை கிழித்து விடப் போகுது என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

என் ஹீரோ தான் பண்ணக்கூடாது, நான் பண்ணுவேன்: "லோகிண்ணா be like ~ எம் படத்துல தான்டா ஹீரோவும் ஹீரோயினும் டச்சிங் பண்ண கூடாது...!! ஆனா நான் படம் நடிக்குறப்ப எல்லா இச்சிங்கும் பண்ணுவேன்..." என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
இவன் நமக்கு வேணாம் தலைவரே: கமல்ஹாசன் மகளுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்திலும் கோட்டை விட்டு விடுவார். தலைவரே அந்த கேங் கோஷ்டி நமக்கு வேண்டாம் தலைவரே என்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் தலைவர் 171 படத்தில் இருந்தே லோகேஷை தூக்க கோரிக்கை வைத்து வரும் அளவுக்கு அந்த ஒரே ஒரு சின்ன டீசர் ரசிகர்களை பித்துப் பிடிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











