Nayanthara: ப்பா.. நேம் பியூட்டி.. ஒரே ஒரு வீடியோ வெளியிட்ட நயன்தாரா.. வரிசையில் வந்த ஹீரோயின்கள்!
சென்னை: நடிகை நயன்தாரா Elle magazineக்காக சமீபத்தில் போட்டோஷூட் நடத்திய வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், பல முன்னணி நடிகைகள் அதற்கு லைக் மற்றும் கமெண்ட்டுகளை போட்டுள்ளனர்.
ஜவான் படத்தின் ரிலீஸை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நடிகை நயன்தாரா இரண்டு மாதங்களில் இதுவரை வெறும் 46 போஸ்ட்டுகளை போட்டு 6.5 மில்லியன் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

வரிசையாக தனது சொந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வரும் நயன்தாரா பிரபல எல்லி இதழுக்கான அட்டை படத்திற்கு நடத்திய போட்டோஷூட் வீடியோவை தற்போது ரசிகர்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளார்.
நேம் பியூட்டி: விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித் குமார் நயன்தாராவை பேரழகி என வர்ணிக்க ஆங்கிலத்தில் நேம் பியூட்டி என சொல்லியிருப்பார். அதையே கமெண்ட்டுகளாக ரசிகர்கள் பதிவிட்டு நயன்தாராவின் பேரழகை வர்ணித்து கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
சிம்பிளா வந்து: ஷூட்டிங்கிற்கு தூங்கு மூஞ்சி முகமாக எந்தவொரு மேக்கப்பும் போட்டுக் கொள்ளாமல் சிம்பிளாக வரும் நயன்தாரா அதன் பின்னர் மேக்கப் மற்றும் வித விதமான உடைகளை அங்கே அணிந்துக் கொண்டு நடத்திய போட்டோஷூட் மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்களை மட்டுமின்றி பல முன்னணி நடிகைகளின் பார்வைகளையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதிஹாசன் முதல் மஞ்சிமா வரை: சற்று முன் வெளியிட்ட இந்த வீடியோவுக்கு அதற்குள் 2.5 லட்சம் பேர் லைக் போட்டுள்ளனர். மேலும், நடிகை ஸ்ருதிஹாசன் மஞ்சிமா மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஹார்ட்டீன் எமோஜிக்களையும், ஃபயர் எமோஜிக்களையும் கமெண்ட்டுகளாக போட்டுள்ளனர். கதீஜா ரஹ்மான் குயின் என கமெண்ட் போட்டு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை கொண்டாடி உள்ளார். ஸ்ருதிஹாசன் நயன்தாராவை ஃபாலோ செய்து கமெண்ட் போட்டதில் இருந்தே விரைவில் கமல் படத்தில் நயன்தாரா நடிக்கப் போவது கன்ஃபார்ம் ஆகி உள்ளது என்கின்றனர்.
பாலிவுட்டில் வாய்ப்புகள்: நடிகை நயன்தாரா தமிழில் மண்ணாங்கட்டி, அன்னபூரணி படங்களில் நடித்துள்ள நிலையில், அடுத்து கமல் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் சில பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
சினிமா ஒரு பக்கம் இருக்க தனது ஸ்கின் கேர் ப்ராடெக்ட்கள் மற்றும் சானிட்டரி நாப்கின் விற்பனை என பிசினஸிலும் படு பிசியாக சுழன்று வேலை பார்த்து வருகிறார் நயன்தாரா.


Click it and Unblock the Notifications











