அசிங்கமா இல்ல... இப்படியா கேள்வி கேட்பது… முகத்தை சுளித்தபடி பதிலளித்த ஸ்ருதி!
சென்னை : நடிகை ஸ்ருதிஹாசனிடம் மோசமான கேள்வியை ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார்.
அதற்கு முகம் சுளித்த எக்ஸ்பிரஷனுடன் பதிலளித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
என்ன கேள்வி கேட்பது என்று ஒரு வரைமுறை இல்லையா இப்படி எல்லாமா கேள்வி கேட்பது என்று இணையவாசிகள் கடுப்பாகினர்.

திறமைசாலி
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு என்று தனி இடம் உண்டு. ஏன் என்றால் இவர் பன்முகத் தன்மைக் கொண்டவர். பாட்டு, நடனம்,இசை, நடிப்பு, தயாரிப்பு என்று அனைத்து துறைகளிலும் தனது திறமையை நிருபித்து சிறந்த நடிகையாக விளக்கி வருகிறார்.

விஜய்சேதுபதியுடன்
ஸ்ருதிஹாசன் எஸ்பி ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்து வருகிறார். மேலும், சபாஷ் நாயுடு, சாலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் கடைசியாக புத்தம் புது காலை என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். அந்த தொடர் மிகப்பெரிய அளவில் இவரக்கு பெயரை பெற்றுத்தந்தது. மேலும், பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான வக்கீல் சாப் திரைப்படத்தின் பவன் கல்யாணின் மனைவியாக நடித்திருந்தார்.

பெரும் சர்ச்சை
பல படங்களில் பிஸியாக நடித்து வந்த ஸ்ருதி, ஊரடங்கில் வீட்டில் இருக்கிறார். இதனால் இணையத்தில் பெரும்பகுதி நேரத்தை செலவழித்து வரும் இவர் விதவிதமான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பெரும் சர்ச்சை கிளப்பினர்.

முகத்தை சுளித்தபடி பதில்
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், லாக்டவுன் தூக்கமின்மை யாருக்கு எல்லாம் இருக்கிறது? என்னிடம் ஏதாவது கேளுங்கள்.. வேடிக்கையாக என பதிவிட்டு இருந்தார். பல ரசிகர்களின் கேள்விக்கு அழகாக பதிலளித்து வந்தார் ஸ்ருதி. திடீரென்று ஒரு ரசிகர் Do Your farts sting? என்று மிகவும் மோசமான கேள்வியை கேட்டார். அந்த நபரின் கேள்விக்கு முகத்தை சுளித்தபடி எக்ஸ்பிரஷனுடன் பதிலளித்துள்ளார் ஸ்ருதி. இதை பார்த்து கடுப்பான இணையவாசியகள் என்ன கேள்வி இது.. அசிங்கமா இல்லையா இப்படி எல்லாமா கேள்வி கேப்பீங்க என்று தங்கள் ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











