»   »  பிந்து மாதவியின் ஆசை இவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறுகிறது?

பிந்து மாதவியின் ஆசை இவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறுகிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் மற்றும் பிந்து மாதவி நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

என்னை அறிந்தால் படம் ஹிட்டான சந்தோஷத்தில் அஜீத்தும், கௌதம் மேனனும் உள்ளனர். அஜீத் அடுத்ததாக தன்னை வைத்து வீரம் படத்தை எடுத்த சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடி யார் என்பது குறித்து தான் பரபரப்பாக பேசப்படுகிறது.

2 நாயகிகள்

2 நாயகிகள்

தற்போதைக்கு தல 56 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் அஜீத்துக்கு 2 ஜோடிகளாம். அதில் ஒருவர் ஸ்ருதி ஹாஸன் மற்றொருவர் பிந்து மாதவி என்று கூறப்படுகிறது.

பிந்து மாதவி

பிந்து மாதவி

சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் அஜீத்துடன் நடிக்க வேண்டும். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமா நடிகர்களில் அவர் தான் மிகவும் அழகானவர் என்று பிந்து மாதவி அண்மையில் தான் தெரிவித்திருந்தார்.

வீண் போகவில்லை

வீண் போகவில்லை

பிந்து மாதவி அளித்த பேட்டி வீண் போகவில்லை. விரைவில் அவருடைய ஆசை நிறைவேற உள்ளது.

அஜீத்

அஜீத்

அஜீத் தனது கர்ப்பிணி மனைவி ஷாலினியுடன் நேரம் செலவிட 2 மாத பிரேக் எடுத்துள்ளார். இதனால் சிறுத்தை சிவா படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 3வது வாரத்தில் துவங்க உள்ளது.

English summary
Buzz is that Shruti Haasan and Bindu Madhavi will romance Ajith in Thala 56 to be directed by Siruthai Siva.
Please Wait while comments are loading...