ஜெயின்ட் தேங்யூ.. 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்.. ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் இன்று தனது 35வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாளை முன்னிட்டு, கருப்பு நிற ஆடை அணிந்து பலூன்களுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நடிகை ஸ்ருதிஹாசனை வாழ்த்தி வருகின்றனர்.

35 வயசாகிடுச்சு

35 வயசாகிடுச்சு

நடிகர் கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதியினருக்கு 1986ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி மகளாக பிறந்தார் ஸ்ருதிஹாசன். இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதிஹாசன். ஹேப்பி பர்த்டே ஸ்ருதி!

பலூன்கள் சூழ

பலூன்கள் சூழ

பொதுவா நடிகைகள் தங்களின் வயதை வெளியே சொல்லவே கூச்சப்படுவார்கள். ஆனால், ஸ்ருதிஹாசன் 35 வயது என பலூனிலே வெளிக்காட்டி பலூன்களுடன் பலூனாக குத்தவச்சி உட்கார்ந்து கொடுத்த க்யூட்டான போஸ் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

ஜெயின்ட் தேங்க்யூ

ஜெயின்ட் தேங்க்யூ

பலூன்களுடன் போஸ் கொடுத்து பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ருதிஹாசன், தனது ரசிகர்களுக்கு giant THANK YOU என கேப்ஷன் கொடுத்து அனைவருக்கும் தனது அன்பு நன்றிகளை தெரிவித்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே தொடர்ந்து படங்களை கொடுக்கவும் தான் தயாராக இருப்பதாகவும், ரசிகர்களின் அன்புக்கு எப்போதுமே நன்றி கடன் பட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

குவியுது வாழ்த்து

குவியுது வாழ்த்து

நடிகை ஸ்ருதிஹாசனின் 35வது பிறந்தநாளை முன்னிட்டு கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஸ்ருதிஹாசன் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். ஸ்ருதிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். டிடி நீலகண்டன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

சங்கராந்தி ஸ்பெஷல்

சங்கராந்தி ஸ்பெஷல்

கடந்த சங்கராந்திக்கு டோலிவுட்டில் ஸ்ருதிஹாசன், ரவிதேஜா நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ள ஸ்ருதிஹாசனுக்கு கிராக் வெற்றி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது.

பிரபாஸுக்கு ஜோடி

பிரபாஸுக்கு ஜோடி

மேலும், கிராக் படத்தின் வெற்றி காரணமாக கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கவுள்ள சலார் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் பிரஷாந்த் நீல் ஸ்ருதிஹாசன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, வெல்கம் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

விஜய்சேதுபதி படம்

விஜய்சேதுபதி படம்

தமிழில் நடிகர் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லாபம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைய உள்ளன. கூடிய சீக்கிரமே ஸ்ருதிஹாசன் விஜய்சேதுபதி நடித்த லாபம் திரைப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டிலும் ஸ்ருதிஹாசன் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X