ஸ்ருதிஹாசன் எக்ஸ் பாய்ஃபிரெண்டுக்கு புது கேர்ள் ஃபிரெண்ட் கிடைத்துவிட்டாரா?.. ஜோடியா செம போஸ்!

மும்பை: நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசனுக்கு 39 வயதாகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. நடிகர் சிம்புவை போல இவருக்கும் 2 காதல் தோல்விகள் ஏற்பட்ட நிலையில், திருமணம் பற்றிய சிந்தனையே இல்லாமல் சினிமாவில் மட்டுமே நாட்டம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளிநாட்டை சேர்ந்த மைக்கேல் கார்சலே என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து வந்தார் நடிகை ஸ்ருதிஹாசன். அதன் பின்னர், சில காரணங்களுக்காக பிரேக்கப் செய்து பிரிந்தார். அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் ஆக்டிவாக ஆரம்பித்த ஸ்ருதிஹாசனுக்கு கடந்த 2020ம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் முளைத்தது.

மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவை நடிகை ஸ்ருதிஹாசன் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. நடிகை ஸ்ருதிஹாசனும் அதனை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், அவரது முன்னாள் காதலரான சாந்தனு ஹசாரிகா மாடல் நடிகையுடன் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் புது காதலியா பாஸ் என்கிற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மனைவிகளுடன் வாழாத கமல்ஹாசன்: கமல்ஹாசன் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னர் 1988ல் சுமார் 9 ஆண்டுகாலம் வாழ்ந்துவிட்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் நடிகை சரிகாவை 1988ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர், அந்த தம்பதியினருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் என 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால், சரிகாவையும் 2004ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார் கமல்ஹாசன். அம்மாவை அப்பா பிரிந்தாலும் இரண்டு மகள்களும் இன்னமும் அப்பாவுடன் டச்சில் இருந்துக் கொண்டு தான் இருக்கின்றனர். கமல்ஹாசன் படங்களில் ஸ்ருதிஹாசன் பணியாற்றியுள்ளார்.

Shruti Haasan Santanu Hazarika Kamal Haasan

கைகூடாத காதல்: அப்பா இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில், மகள் ஸ்ருதிஹாசன் இருவரை காதலித்து பிரேக்கப் செய்துள்ளார். மைக்கேல் கார்சலேவை தொடர்ந்து சாந்தனு ஹசாரிகாவுடன் சில ஆண்டுகள் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த ஸ்ருதிஹாசன் பிரிந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என் மகள் நினைத்திருந்தால் இந்நேரம் எப்போவோ நான் தாத்தாவாக ஆகியிருப்பேன் என விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் கூட கமல்ஹாசன் பேசியிருந்தார். 70 வயதான நிலையிலும் கமல்ஹாசன் தனது பேரக் குழந்தைகளை கொஞ்ச முடியாத சூழல் உருவாகியுள்ளது.

சாந்தனு ஹசாரிகாவின் புதிய காதலியா?: மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா சினிமாவில் வரும் ஹார்ட்டின் எமோஜி போன்று அல்லாமல் ஒரிஜினலாக இதய வடிவிலான டிசைனை தனது உடைக்கு மேலே செட் செய்து வைத்துக் கொண்டு டிஜே ஒஎருவருடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசனை பிரிந்த நிலையில், சில மாதங்கள் சோஷியல் மீடியாவில் இருந்து விலகியிருந்த சாந்தனு தற்போது அம்பிகா நாயக் எனும் பாடகி மற்றும் டிஜே பிரபலத்துடன் போஸ் கொடுத்துள்ள நிலையில், புதிய காதலி கிடைத்துவிட்டாரா என சாந்தனுவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X