பிறந்த நாள் கொண்டாட்டம்.. அதை மறந்துபோன ஸ்ருதிஹாசன்.. ஓடி வந்து உதவிய புது காதலர்!
சென்னை: தன்னுடைய டிக்கெட்டை மறந்து விமான நிலையம் வந்த நடிகை ஸ்ருதிஹாசனுக்கு அவருடைய புதிய காதலர், ஓடி வந்து உதவி செய்துள்ளார்.
பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான இவருக்கு நேற்று 35 வது பிறந்த நாள். இதையடுத்து சினிமா பிரபலங்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கவனத்தை ஈர்த்தது
இந்நிலையில் அவர் தனது பிறந்த நாளை மும்பையில் தனது புதிய காதலருடன் கொண்டாடி இருக்கிறார். இதற்காக நடந்த பார்ட்டியில் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். ஸ்ருதிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களில் ஒருவருடைய வாழ்த்து மட்டும் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

சாந்தனு ஹஸாரிகா
அது பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு ஹஸாரிகாவின் வாழ்த்து. அவர் 'ஹேப்பி பர்த்டே லவ்' என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதி, தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாக மாற்றிய உங்களுக்கு நன்றி என்று கூறியிருந்தார். இதையடுத்து அவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

புதிய காதலர்
இதையடுத்து அவர்தான் ஸ்ருதியின் புதிய காதலர் என்பது தெரியவந்தது. நடிகை ஸ்ருதி, ஏற்கனவே, இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து வந்தார் இருவரும் ஒன்றாக விழாக்களுக்கு சென்ற புகைப்படங்கள் அப்போது வைரலாயின. பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

விமான நிலையம்
பிரிந்துவிட்டதை ஸ்ருதிஹாசனும் உறுதி செய்தார். இந்நிலையில் புதிதாக சாந்தனு ஹஸாரிகாவை அவர் காதலித்து வருவது இப்போது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய காதலருடன் மும்பை விமான நிலையத்துக்கு வரும் வீடியோ வைரலாகி வருகிறது. இருவரும் பேசிக் கொண்டு வருகின்றனர்.
டிக்கெட்டை மறந்தார்
இந்நிலையில், ஸ்ருதி விமான நிலையத்துக்குள் செல்ல முயல்கிறார். அப்போது வேகமாக ஓடி வரும் அவர் காதலர், டிக்கெட் உள்ளிட்டவை அடங்கிய சிறிய பாக்ஸை அவரிடம் கொடுக்கிறார். அதைப் பெற்றுக்கொள்ள காத்திருக்கும் ஸ்ருதி, அதைப் பெற்றுக்கொண்டு செல்கிறார். ஸ்ருதி டிக்கெட்டை மறந்துவிட்டார் என்றும் அதைதான் காதலர் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











